பக்கம்:இலக்கியச் சாறு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

வ.சுப. மாணிக்கனார்



வாயின் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறையறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் கறவைகள் பின்சென்று காணஞ்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன்றன்னோடு உறவேல் நடித்கிங் கொழிக்க வொழியாது என்ற பகுதிகள் கோதையை ஆய்ச்சியருள் ஒருத்தியாகவே கட்டுகின்றது. ஆண் ஆழ்வார்கள் தம்மை நாயகியாகப் பாவித்துப் பாடுவது மேட்டுமடையென்று ஒருவகைக் குற்றம் சொல்லுகின்றோம்.அப்படியானால் பட்டர்பிரான்மகளாகப் பார்ப்பனக் குலத்து வளர்ந்த கோதை ஆயர்குல நாயகியாகத் தன்னைப் பாவித்துப் பாடினாள் என்பதும் மேட்டு மடையாகாதோ? சிந்தியுங்கள். அங்ஙனம் சொல்லாமல் கோதை குழவிப் பருவ முதல் இடைக்குல மகளாகவே வளர்ந்தாள்; வேறு குலப்பழக்கம் அவளுக்கு இல்லை என்று துணிவதே சிறப்பாகும். அவரப்பிராயந் தொடங்கி என்றும் என்று ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்' என்பதுங் காண்க நாச்சியார்

ஆண்டாள், கோதை என்ற பெயர் வழக்குப் பெரிதாக இருந்தாலும்,நாச்சியார்திருமொழி என்பதே பிரபந்த வழக்கு. இதனை மேலும் சிந்திப்போம். ஆய்ச்சி என்பது இடைக்குலப் பெயர். செறிவளை ஆய்ச்சியர்’ எனச் சிலப்ப்திகாரமும், ‘ஆய்ச்சியர் இன்புற்றயர்வர் என முல்லைக்கலியும் இவ்வாறே நம்பியகப் பொருள் முதலான இலக்கணங்களும் கூறும்.

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர் என்பது நாச்சியார் திருமொழி, ஆய்ச்சி என்பதில் இடையகரவொற்றுக்கெட்டு ஆச்சி என வருதல் உலக வழக்கு. வாய்ச்சி-வாச்சி, காய்ச்சி-காச்சி, பாய்ச்சி-பாச்சி என்ற மரூஉக்களை ஒப்பு நோக்குக.மேலும் தன்னோடு உறவாகக் கூறும்போது, சுற்றச் சொற்கள் தமிழ் மொழியில் நகரமாகத் திரிதல் உண்டு. இது தமிழின் சிறப்பியல். ஆத்தாள்-நாத்தாள்: அப்பச்சி-நப்பச்சி ஆயாள்-நாயாள், அண்ணன்-நண்ணன்,