பக்கம்:இலக்கியச் சாறு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

வ.சுப. மாணிக்கனார்



வாராய் நெஞ்சே உன்தன் துன்மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டிங்கு ஆராய், அடிக்கடி சுற்றுகின்றாய்; உன் அவலமதிக்கு ஓராயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலையோ?கெடுவாய்; பாராய் உனைக் கொல்லுவேன்வெல்லுவேன் அருட்பாங்குகொண்டே (பாய 50) நெஞ்சு என்னும் உட்பகையை அருகில் அழைத்து, ‘என் உடல் வாழ் நெஞ்சே! உன் கெடுநெறிக்கு மூட்டைகட்டு. நான் சொல்வதை நன்றாக எண்ணிப்பார்.இறைவன் ஒருவனிடத்துச் சும்மா இரு என்று நான் சொல்லவும் அதனை விட்டு அடிக்கடி எங்கோ சுற்றுகிறாய். எவ்வளவு அறிவுரை புகன்றாலும் கெடுமதி உணருமா? உணராது கெடப்போகின்றாய். நான் இறைவனை அடையவேண்டி உன்னைக் கொல்லுவேன்; கொன்று என் குறிக்கோளில் வெற்றியுறுவேன்.கொன்ற எனக்குப் பாவமன்றோ சாரும் என்று நீ எண்ண வேண்டாம். உன்னைக் கொல்ல நான் கொள்ளும் கருவி அருள் என்னும் வாள்': இங்ஙனம் அடிகள் தம் நெஞ்சோடும் டோர் தொடுக்க முனைவதைப் பார்க்கின்றோம். போருணர்ச்சி சினவுணர்ச்சி இன்றித் தோன்றாதல்லவா?

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே. (சத. 20) இத்திருவாசகம் மணிவாசகர் தம்நெஞ்சை விளித்துக் கூறியது. இச்செய்யுள் முழுதும் சினவுணர்வு உடையதன்று. சினத்தொடு இகழ்வும் இரக்கமும் அறிவுரையும் கலந்துளதன்நெஞ்சு திருந்தும் என்ற நம்பிக்கை இன்னும் மணிவாசகர்க்கு இருந்ததுபோலும். தாயுமானார் தன் மனத்திடத்து நம்பிக்கையை இழந்து விட்டார். பன்முறை இடித்துரைத்தும் திருந்தும் போக்கை அதனிடத்து இவர் காணவில்லை.மறாான கெடுதற் போக்கே வளர்ந்து வரக் கண்டார். கையோ காலோ உறுப்பு அழுகினால் துண்டாக வெட்டவில்லையா? நோய்மிக்காரைப் பெருந்துக்க மருந்துகொடுத்து மூச்சு ஒடுக்குவதில்லையா? தீய பெருமனத்தை வேறென் செய்வது?