பக்கம்:இலக்கியச் சாறு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

வ.சுப. மாணிக்கனார்



நோன்புகள் கொள்ளாவிட்டாலும், கொல்லா நோன்பு ஒன்று கடைப்பிடிப்பவரே'நல்லோர்’ எனத் தம் பாராட்டுதலையும், கொல்லுதலைச் செய்து கொண்டு பிற எத்தன்ை நோன்பு கொண்டிருந்தாலும் அவரைத் தீயரென்று சொல்லலாமா என்றால் அவரைக்குறிப்பிட்டுச்சொல்வதற்குச்சொல்லில்லை என்று காட்ட யாரோ அறியேன்” எனத் தம் வெறுப்பையும் அடிகள் வெளிப்படுத்துவர். 'ஒன்றாக நல்லது கொல்லாமை' என்ற வள்ளுவர் குறிக்கோளே அடிகளின் கோளாகும். வள்ளுவர் கொல்லாமையே நல்லது எனப் பண்பின்மேல் வைத்து மொழிந்ததையே அடிகள் கொல்லாமையுடையவரே நல்லோர் எனப் பண்புடையார் மேல் வைத்துப் பாடிய ஒற்றுமை நினையத்தகும்.

கொல்லாக்குறிக்கோள்கொண்டதாயுமானவர்தம் மனம் குவியாதபோது, சும்மா இராதபோது, எங்கும் சுற்றி அலைந்தபோது, எவ்வளவுகிற்றும் கேட்டும் ஒடுங்காதபோது, மெளனகுரு வந்து போதித்தும் மடங்காதபோது, கவர்ந்து எழுந்து ஒங்கிப் பொங்கும் சினங்கொண்டார். உன்னை விடுவேனாபார் என்று உருத்தெழுந்தார்.தம் குறிக்கோளையும் மறந்து, சற்றே தள்ளி வைத்து, 'கெடுவாய் பாராய் உனைக்கொல்லுவேன்' என்று மனக்கொலை செய்ய எண்ணினார் என்று பார்க்கின்றோம்.இது கொள்கை முரணா? களவைக் கற்புக் களவு, கள்ளக் களவு என இரண்டாகக் கொள்ளலாம் எனின், வறுமையை அற வறுமை, புற வறுமை என இரண்டாகக் கொள்ளலாம் எனின்,சினத்தைப் புண்படு சினம், பண்படு சினம் என இரண்டாகவும் கொலையையும் ஏன்,வாழ்வுக்கொலை,தாழ்வுக்கொலையென இரண்டாகவும் கொள்ளல் கூடாது?

சினமிறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே.(169)