பக்கம்:இலக்கியச் சாறு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 149

காண்கின்றார்? இவ்வடிப்படை தெரிந்தால் தான் நூலின் உயிரோட்டம் விளங்கும். காந்திப் பெருமானைத் தம் தெய்வமாகவும், தம்மைக் காந்தியடினாகவும் வைத்து வழிபடுகின்றார் இராய.சொ. எனவே தேவார திருவாசக பிரபந்தங்கள்போலக் காந்திக் கவிதையும் தெய்வப் பாசுரமாகும்.

- பண்கொண்ட குழலூதிப் பசுக்காத்த

திருமாலும் பங்கிற் பச்சைப் பெண்கொண்ட பெருமானும் பிரமனெனும்

மறையோனும் புத்தன் ஏசு - மண்கொண்ட வள்ளுவனும் மற்றொழிந்த

பெரியோரும் ஒன்றாய் வந்த கண்கண்ட தெய்வமெனும் காந்திதனை :

இழந்திட்டோம் அந்தோ அந்தோ. (277) இதுவரை ஞாலத்தார் வழிபட்டுவரும் பல்வேறு கடவுளர்களும் சிந்தனைப் பெரியவர்களும் திரண்டு ஒருருக் கொண்ட தனி முழுத் தெய்வம் எனக் காந்தியைப் போற்றுவர் இராய.சொ. அடிகளார், தெய்வ உறவு ஆனமையின், காந்திக் கவிதைகள் தெய்வ மணக்கும் தமிழ்ச் சோலையாகின்றன. தேவ நிலைக்கருத்துக்கள் பொலிகின்றன. கடவுள்நிலை பெற்ற காந்திப் பெருமான் (56), காந்திப் பரந்தாமன் (86), கருதுமின் காந்தி பத மலர் (137), கன்னல் மொழி பகர் காந்தியடியார் (121) என்றாங்குப் புதிய தெய்வத் தொடர்கள் இந்நூலில் ஆளப்பட்டுள. மைப்படிந்தோன் ஆனாலும் அவன் புகழை வாயார வாழ்த்துவனேல் ஒப்பரிய உயர் பதத்தை உறுவன் (2) என முத்தியும் மொழியப்படுகின்றது. * * *

தெய்வக் காந்தியைத் தொழும் இராய.சொ. இடத்து நாயன்மார் ஆழ்வார் ஒப்ப அடியவர் மனமையைக் காண்கின்றோம். எளியேன் உள்ளம் கோயில் கொண்டிருக்கும் கருணை இருங்கடலே (15) எனவும், இனிப்பிறவி எடுக்கும்போது எம்பெருமான் உன் குணத்தை இடைவிடாது போற்றுமாறு பிறத்தல் வேண்டும் (2) எனவும் பாடுவர்.