பக்கம்:இலக்கியச் சாறு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 155

சிறையுறையும் தன் காதலனுக்கு இன்னொரு சிறைவாழ் காதலி வண்டு மூலம் கூறுகின்றாள் என்பது இவ்வந்தாதியின் துறை. இஃது அகத்துறையில் ஒரு புதுத்துறை.

காந்தியந்தாதித் தலைவி காதலுக்கும் ஒரு விதி போடுகின்றாள்; தன்னை விழையும் தலைவனை நோக்கி, ‘என்னை ம்ணஞ்செய்து கொள்ள விரும்புவையேல் காந்தியின் அறத்தை உலகறியச் செயலால் பரப்புவேன்; பரவ ஒத்துழைப்பேன் என்று காந்திமேல ஆணையிடுவாய்; இடுவையேல் உனைநான்மன்றல் புரிவேன்; என்னை விரும்பின் இது தவிர உனக்கு வேறு வழி இல்லை என்று காதல் விதி பகர்கின்றாள் (145). இதனால் மணக்காதவினும் காந்திக்காதல் பெரிதென உணர்கின்றோம்.

மெய்நொந்து உனைப்பெற்று யான்பெற்ற இன்பமிம் மேதினியில் அய்யா பெரிதே எனினும் அருந்தவக் காந்திகளத்து எய்யாது உழைத்தின்று இனிய பெருநலம் எய்தலின்றித் துய்யாய் சிலநாள் வறிதே கழித்திடத் தோன்றினையே

உன்னைப் பெறக் கழித்த நாட்களில் காந்திவழிப்படி நாட்டுத் தொண்டு செய்ய முடியாமற் போயிற்றே என்று வருந்துகின்றாள் தாய். மகவின்பத்திலும் நாட்டுக்கடமை பெரிது எனவும் வீழ்நாள் படாமல் நாள்தோறும் நாட்டுக் கடமை செய்யவேண்டும் எனவும் இது புறத்துறையில் ஒரு புதுத்துறையாகும்.தலைவன்போர்க்களம் செல்வான் என்றால் புற மரபு. அப்போர்க்களம் குருதிப் படைப் போர்க்களம் ஆகும். காந்திப் போர்க்களம் உறுதியுடையதேயன்றிக் குருதியுடையதன்று. மக்களைச் சேர்த்து ஒரு மாபெரும்போர் முந்தையர் காணாமுறை வகுத்திட்டவன் (132) என்பர் புலவர். இது பகைவர்க்கும் இனிய போராதலின் பெண்ணும் தனித்து அமர்க்களம் புகுகின்றாள். வேந்தர் விறலும் மதியா வெறுங்கை அமர்ர்களத்தே சேர்ந்தனளே' என்பது நற்றாய் இரக்கம் (139). கன்னி காதற்களம் புகாது காந்திக்களம் ஏகுகின்றாள். இதுவும் புறத்துறையில் ஒரு புதுத்துறை. இப்புதுமைத்துறைகள் பொருந்துமா? முரண்கொலோ என்றால், அன்பின் அடிப்படையிலும் அறத்தின்