பக்கம்:இலக்கியச் சாறு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

வ.சுப. மாணிக்கனார்



அடிப்படையிலும் வழக்கு வழிப்பட்ட துறைகள் இலக்கிய முறையிலும் ஆகும்.தொல்காப்பியர் ஆணைப் படிமரபுநிலை திரியா மாட்சியனவே ஆகும்.

அனிச்சப்பூவையும் சூடமாட்டாத அவ்வளவு மெல்லிய இடையினள் என்று வள்ளுவர் நயம்படப்பாராட்டுகின்றாரே, அந்த மெல்லிடை கதர் பெறல் காணவில்லையா? அதன் மேலும் வண்டுகள் தலைமேல் இருந்தால் இடை என்னாம் என்று வினாவுகின்றான் தலைவன் (145), “கதர் உடுத்தியே கைராட்டு உருட்டும் நற்காரிகையீர் (126) என்று காதலன் கலைமான் தேடுகின்றான். தரித்தாள் முரட்டுத் துணிக்கதரை (140) என்று உடன் போகிய மகளுக்கு நற்றாய் இரங்குகின்றாள். ‘நாடு செழித்திட நண்ணும் முரட்டுக்கதர் சுமந்து வாடிய சிற்றிடை (124) என்பதனால், கதரால் இடைவாடினாலும் நாடு செழிக்கும் என்ற கருத்து புலனாகின்றது. தனிக்கதர் தாங்கும் அழகினன் (127) என்று தலைவனும் காந்தி மதத்தவன் என்று காட்டுவான் கதரணிகின்றான். தமிழே பயின்று கதரே சுமந்து தளரும் இடை' (144)என்றால், இடைத் தளர்ச்சிக்கு முரட்டுக்கதர் அணிதல் காரணம் என்பது சரி;தமிழ் பயில்தல் இடைத்தளர்வுக்கு எப்படிக் காரணம் ஆகும்? சிலர் இருந்து படிப்பர்; சிலரோ நடந்து நடந்து படிப்பர். இக்காந்தித் தலைவி நடந்து தமிழ் நூலை ஏந்திப் படிப்பவள் ஆதலின் தமிழும் அவள் நுசுப்புத் தளர்ச்சிக்குக் காரணமாயிற்று. தமிழ்ப் படிப்பு மெலிவு தரும் என்பதனைத் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ என்ற திருக்கோவை வினாவால் உய்த்துணரலாம். புலமைச்சிறப்பு

காந்திக் கவிதை தனக்குவமையில்லாத காந்தியைப் பொருளாகக் கொண்டது. இது ஒரு சிறப்பே என்றாலும் கவிதையின் நீடித்த வழிவழி வாழ்வுக்குப் புலமைச் சிறப்பு வேண்டும். இலக்கிய வனப்புக்கள் இன்றேல், கவிதை பலர் படிக்கம் கவர்ச்சி இழக்கும்; உப்பின்றியிருக்கும்; ஒட்டமற்ற குட்டையாகும். இராய.சொ. அவர்கள் தமிழ்க் கடல், கவிதைக்