பக்கம்:இலக்கியச் சாறு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

வ.சுப. மாணிக்கனார்



ஒராடை ஆண்டி, நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரோ ஆடைபல அணியும் நாகரிகர். ஆனாலும் ஒராடையுடனே இலண்டன்சென்று அரசரையும் அந்நாட்டு மக்களையும்கண்டு இந்திய உரிமையை எடுத்து விளம்பினார் காந்தியண்ணல்,

ஒன்னார்கள் கண்டஞ்கம் ஒற்றைக் கத்தர்

உடுத்துஆடை பலசுமக்கும் ஒரார் நாட்டும் எல்நாட்டி மீண்ட பெரும் எழிலோன். (207) காந்தி உடுத்திய ஒரு கதர் பகைவர்க்குப் படையாய்த் தோன்றிற்றாம். அழகு என்பது ஆடைமென்மையிலும் எண்ணிக்கையிலும் இல்லை என்பதனை 'எழிலோன்’ என்ற சொல்லால் அறியலாம்.

இலக்கிய நயம் பலவகைப்படும். அறிவு தித்திக்குமாறு சொல்வது பொருள் நயம் எனப்படும். இதனால் கருத்தின் அருமையையும் புலவனின் சிந்தனையையும் புரிந்து கொள் கின்றோம். இம்மை மறுமை என்ற பிறப்புக்கொள்கைகள் பல சிந்தனையைப் புலவர்கட்குத் துண்டியுள்ளன. இம்மைப் பிறப்பில் பிரியமாட்டோம் என்று தலைவன் ஆறுதல் மொழிந்தபோது அப்படியானால் மறுபிறப்பிற் பிரிவான் போலும் எனத் தலைவி கலங்கினாள் என்பர் வள்ளுவர்.

எந்திர பீரங்கி எங்கள்

உணர்ச்சி தன்னை என்செய்யும்-உடல் வெந்து போயின் வேற்றுடலில்

வீறுகொள்வது உறுதியால். (254) உடலைக் கொல்லலாம்; விடுதலையுணர்வுக்குக் கொல்லி யில்லை. ஆசையுடைவர்கட்கு மறுபிறப்பு உண்டு. ‘விடுதலை வேட்கையுடைய நாங்கள் இந்த மண்ணில் மறுபிறப்பு எய்துவோம்; எங்கள் உணர்ச்சி மறு உடம்பில் தொடரும்’ என்று உடலற்றாலும் உணர்ச்சியறாமையைப் பிறப்புக் கொள்கையில் வைத்துக் காட்டுவர் புலவர்.முருகன் வேல் ஏந்தியதற்கு இராய சொ. மொழியும் கருத்துரை வேறு. குறவள்ளியை மணந்தான் வேலன். கோயிலில் அவ்வள்ளியைத்