பக்கம்:இலக்கியச் சாறு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு - 159

தொழுது பூசை செய்யும் மாந்தர் வள்ளி குலத்தாரைத் திண்டாதார் என்று கோயிற்றடை செய்கின்றனர். இத்தடையாளர்களை வள்ளி கணவன் பொறுப்பானா? “தீதுடையார் தடை ஒறுக்க அன்றோ அந்தத் திருக்கோலம்’ (262) என்பதாம். நடைவேகம்

பாடல் படிப்பவர்க்கு உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் எழுப்ப வேண்டுமெனின், ஆற்றொழுக்குப் போன்ற அணிநடைச் செய்யுட்கள் சாலா. வெள்ளம் நிகர்க்கும் வேகப்பாவேண்டும்.சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் சொல்லிலும் சொற்றொடரிலும் சொன் முறையிலும் வேண்டும். கருத்தில் ஆழம் மட்டும் போதாது, சுழிப்பாடும் வேண்டும். செவிச் சுவையறியா வாய்ச்சுவை மாக்கள் அவிந்தாலென்ன அவிதலினின்றும் தப்பிப் பிழைத்து வாழ்ந்தாலென்ன, என்று வள்ளுவர் வேகப்படவில்லையா? வேகமில் கவிதைகள் இலக்கியப்பாகம் இல்லாதவை. காந்திக் கவிதைகள் காட்டாறு போலச் சாடும் வேகத்தை உணர்கின்றோம். கர்ந்திப் பெம்மானைக் கொன்ற கொடுசேய் ஊழிக்காலம் முழுதும் நரகடைவான் என்று சிலர் சொல்வது இராய.சொ. செவியிற் படுகின்றது. சினமும் அவலமும் பிறக்கின்றன புலவர் பெருமானுக்கு.

உய்யாது ஒருபாவி ஊழிநாகு உற்றாலென்? மெய்யான காந்திநமை விட்டானே-ஐயோ (110) என்று துடிக்கின்றார். 'பாவி நரகு அடைவான் என்பது நமக்கு ஆறுதலா? காந்தி நம்மைப் பிரிந்தாரே ஐயோ என்று கதறுகின்றார். -

பித்துக் கொண்டு ஒப்புயர்வில் பெண்மை தனைப்பழிப்போர். செத்த இடம் புல்முளைக்கச் செய்யுநாள் எந்நாளோ? (247) இருவர் இணைந்துபெறும் இல்வாழ்வுக்கு அறிகுறியா ஒருவர் பெறுந்தாலி ஒழியுநாள் எந்நாளோ? (248)