பக்கம்:இலக்கியச் சாறு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

வ.சுப. மாணிக்கனார்



எங்ஙனம் பொருந்தும்? இராமனது புகழைத் திருத்தினான் என்று வரும்போது கவிக்கு நாயகன் என்றதொடர் குரங்கிற் சிறந்த அனுமனைச் சுட்டும். இராமனது கதையைத் திருத்தினான் என்ற போது அத்தொடர் புலவரிற் சிறந்த கம்பனைக் குறிக்கும் என்று தெளிக.இராமன் புகழைத் திருத்த வேண்டும் எனின் அதற்கேற்பக் கதையின் போக்கைத் திருத்தியாக வேண்டும். கதை திருந்தினால்ல்லது புகழ் திருந்தாது என்பதும் இதனால் உணரப்படும். மேலும் ஈங்கு இராய.சொ.வின் துணிவைப் புலப்படுத்தத் துணிகின்றேன். ‘செவிக்குத் தேனென இராகவன் புழைத் திருத்திய’ என்ற கம்பர்வாக்கு அவ்வளவு பொருத்தமில்லை. புகழைத் திருத்துதல் என்றால் பழியாக மாற்றுதல் என்றன்றோ பொருள்படும்? சரி திருத்தம் என்று சொல்லுகின்றோமா, பிழைதிருத்தம் என்று சொல்லுகின்றோமா? ஒப்பிட்டுக் காண்க. ஆதலாலும், காசில்கொற்றத்து இராமன் கதை’ என்று வருதலாலும், ‘இராமன் கதை திருத்தி’ என்று கம்பரைத் திருத்தினார் தமிழ்க் கடலார் என்பது என் கருத்து. காந்திக் கவிதை என்னும் இப்படைப்பு நூல் செய்யுள் வடிவில் தோன்றிய பெறலரும் வரலாற்றிலக்கியம்; வருங்காலத்தார்க்கு ஒராயிரம் உண்மைக் குறிப்புக்களைக் காத்து வைத்திருக்கும் தமிழ்ப்பேழை; சால்பியம், புரட்சியம், பொதுவியம், மக்களியம் என எண்ணப்படும் பல்லியங்களும் உள்ளடங்கிய காந்தியத்தின் வழிகாட்டி காந்திப் பொருளும் தமிழ்க் கடலார் புலமையும் இரண்டறக் கலந்து பிறந்த இக்காந்திக் கவிதை இந்தியமொழிகளில் எல்லாம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பது என் விழைவு.