பக்கம்:இலக்கியச் சாறு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\

168 வ.சுப. மாணிக்கனார்

வித்தாரக் கைவாங்கி வேலர் திருமுகத்தை வைத்தார் சிரசில் வணிகேசர் -

என்று இந்திரன்போற் செல்வமுடைய ஏழு நகரார்களும் தங்கள் விலாசமிட்ட தெய்வத் திருமுகத்தைத் தலைமேற் கொண்டனர்; எல்லோரும் அறிய வாசித்துக் காட்டினர்; கொடை செய்வதைத் தாழ்க்காது, நிதியும் ஆடையும் தங்கநகையும் நெல்லும் ஊரும் ஒவ்வோர் திருமணத்திற்கும் ஒர் பணமும் அதற்குரிய சாசனமும் பண்டாரத்துக்கு வழங்கினார். இவ்வாறு திருமுகம் கொடை முகமாக திறைவு பெறுகின்றது. பொருள் வகையாலும் பொருளாலும் கதையாலும் அங்கதத்தாலும் இனச் செய்தியாலும் கொடையாலும் இத்திருமுகம் தெய்வ மணக்கும் செய்யுளாம். திருமுகவிலாசம் பாடுவார் விலாசமாகும்.

செயங்கொண்டார் வழக்கம் என்னும் நூல் பாடுவார் தம் படைப்பில் தலையான செய்யுளாகும். இது நூறு பாடல் கொண்ட சிற்றியலக்கிச் சதக வகையைச் சார்ந்தது; அறுசீர் விருத்தங்களால் அமைந்தது. இதற்கு விரிந்தவுரை ஒன்றுண்டு. கதைப் பகுதிகள் சுவையாகப் புனையப்பட்டுள. இவ் வுரையையும் முத்தப்பரே எழுதினர் என்று கருதலாம். பழமொழியும் அதனை விளக்கும் கதையும் இணைந்த ஒரு புதுத்தோற்றமாக இச்சதகம் விளங்குகின்றது. இவ்வகையில் ஒரு புதுவடிவகண்டவர்பாடுவார்.முத்தப்பர் நேமங்கோயிலர். ‘தென்நியமச் செயங்கொண்டசோழிசர்’ என்பதனால் நியமம் என்பதே சரியான சொல் எனவும் நேமம் என்பது திரிபெனவும் கொள்ளவேண்டும். பெயரன்-பேரன் என வருதல் காண்க. எனவே தம் கோயிற்கடவுளர்மேல் இச்சதகம் பாடினார் முத்தப்பர் என்பது தெளிவு.

செயங்கொண்டார் சதகம் என்று ஏனை நூல்கள் போலப் பெயர் பெறாமல் வழக்கம்’ என்ற பெயர் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் இந்நூலில் வரும் பழமொழிகளும் உலக வழக்கத்தில் உள்ளவை. விளக்கக் கதைகளும் உலக வழக்கத்தில் உள்ளவை. அதனால் வழக்கம் என்ற பெயர் பொருந்தும் பாடுவாரின் நுணுகி -ոոպւն