பக்கம்:இலக்கியச் சாறு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 469

நுட்பத்திறத்தையும், எதனையும் மறித்து எதிர்த்துப் பார்க்கும் நோக்கினையும் இச்செய்யுட்கள் ஒளிகாலுகின்றன. இவர் பலவிடங்களிற் காட்டும் கதை யோட்டங்கள் நடைமுறை வழக்கிற்கு வேறாகவும் உள்ளன. அக்கதைகளைத் திறனாடும் நெறியும் வீறாகவுள்ளன. சான்றாகச் சிற காண்போம்.

'ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு அழகு'என்பது ஒரு பழமொழி. வாலியும் சுக்கிரீவனும் தம்முள் பகைத்துக் கொண்டதனால், இராமனுக்குச் சீதையைச் சிறைமீட்கும் காரியம் நிறைவேறிற்று என்பர் பாடுவார்.

'கொண்டவன் துற்றினால் கூறையும் தூற்றும்’ என்பது ஒர் உலக வழக்கு. கெளதமுனி வெளியே சென்ற சமயம் பார்த்துத் தேவேந்திரன் மாறுவேடம் பூண்டு அகலியையைக் கற்பழித்தான். இதனைக் கண்டுணர்ந்த முனிவர் இந்திரனைக் கேவல வடிவாகச் சபித்தார்.இவ்வடிவினால்,மறைவாக நடந்த ஒரு கேவல நிகழ்ச்சி உலகறியப் பரவி விட்டது. முனிவனுக்குப் பொறுமைத் தன்மை இருந்திருந்தால் மனைவியின் செயல் வெளிச்சமாகி இருக்காதே என்று முனிமேல் பழிபோடுவர் முத்தப்பர். - -

பண்டுலகில் அகலியை இந்திரன் களவாய்த்

தழுவி வெளிப்படுஞ் சாலத்தைக் கண்டுமுனி சகியாமல் இருவரையும்

சபித்ததனால் கனச்சொல்லாச்சே இக்கதைக்கு இத்தகைய கருத்துரையைக் கம்பர் முதலாக யாரும் சொல்லியதில்லை.

முத்தப்பர் முருகனிடத்துப் பற்றப்பர். ஆதலின் முருகன் திருவிளையாடில்களைப் போற்றிப் பாடுவதே அன்புமுறை. முருகன் வேடவள்ளியை மணக்கச் சில நயங்கள் செய்தான். அவற்றுள் ஒன்று வேங்கை மரமாய் நின்றது.

அண்ணலருள் சரவணவேள் புனக்குறப்பெண்

வெயிலினிற்கும் அவதி பார்த்துத் தண்ணுலவு வேங்கைமர நிழலாய்நின்று

அவள்வருந்தும் தகைதீர்த் தாரே.