பக்கம்:இலக்கியச் சாறு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பாரதியின் புலமை

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார் பாட்டிலும் பாட்டின் புலமையிலும் பாரதியார் பெருங்காதல் கொண்டவர்; படைப்புக்களில் ஆச்சரியமான பொருள் பாட்டே என்று துணிந்தவர்; கவிதையிலே நிலையான இன்பம் கண்டவர். பாட்டினால் நாட்டு மக்கள் பிணியையும் வறுமையையும் ஒட்டலாம். மானுடச் சாதியை ஒன்றெனக் கூட்டலாம்; வைய முழுதும் பயனுறச் செய்யலாம்; நானிலத்தவர் மேனிலை எய்தலாம் என்று தெளிந்த புலவன் பாரதி. என்தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேணும் என வரங்கேட்டார். கதைகள் சொல்லிக் கவிதை எழுதும் ஆசையும், நீண்ட காவியம் படைக்கும் வேட்கையும், மக்களின் வாழ்க்கைச் சித்திரங்களை நாடகச் செய்யுள் ஆக்கும் விழைவும் பாரதியாருக்கு இருந்தன. 'இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’ என்ற கடமையை அவர் பிறர்க்கேயன்றித் தமக்கும் சொல்லிக்கொண்டார். இவ்வாசைகளை நிறைவேற்றத் தக்க கல்விப்பெருக்கும் கவித்துடிப்பும்வாய்த்திருந்த பாரதியாருக்கு, ஐயகோ வாழ்நாள்தான் நிரம்ப இல்லை.

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் (குறள் 779) கவியுளம்

கம்பர், வள்ளுவர், இளங்கோ நூல்களில் மதி தீட்டிய பாரதி புலமையோடு பாடவேண்டும் என்று வேட்கை கொண்டார். ‘பாட்டுத்திறம்’ என்றும், ‘கவியுளம்' என்றும் புலமையை அவர் சுட்டுவர். ‘யாமறிந்த புலவரிலே’ என்று