பக்கம்:இலக்கியச் சாறு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 175

பணிகேட்கக் கடவோமோ என்று அரசியலில் உரிமை முழக்கம் செய்தவர்; அரசனை எதிர்த்தவர்; சமயத்துறையிலோ ஆண்டான் அடிமையை நாடியவர்: சிவனே என்னும் நாவுடையார் நமையாள உடையார்’ என்று பணிவு தலைக்கொண்டவர். அப்பரின் உலகவுரிமையும் இறையடிமையும் நம் பாரதியாரை மிகவும் கவர்ந்தன.

பூமியில் எவர்க்குமினி

அடிமை செய்யோம்-பரி பூரணனுக்கே யடிமை

செய்து வாழ்வோம் W - பாரதி நாமார்க்கும் குடியல்லோம்...... தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கோ நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமோ. - அப்பர்

பாரதியார் சொல்லும் பரிபூரணன் யாவன்? தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையன் எனத் தேவாரத்தால் விளங்கல் காண்க, தேவரும் பாரதியாரும்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங் காவியம், பெருங்கதை, சூளாமணி, பெரியபுராணம், பாரதம் என்ற பல பெருநூல்கள் தமிழ்மொழியில் உள. இவ்விலக்கியப் பரப்பை உட்கொண்டுதான் 'தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்’ என்று பாரதியார் தமிழ்ப் புகழ் கூறினார். கம்பர், இளங்கோவின் காவியம் இரண்டனைத்தான். இப்புகழ் மாலை குறிக்கும் என்று கருதுதல் பிழையாகும்.

தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல் தீய கைக்கிளை யானெவன் பாடுதல் என்ற பாரதிபாட்டில்தேவர் என்பது ஒருகால்சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரைச் சுட்டலாம். பேரரசன் மகனான சீவகன் சுடுகாட்டில் யாரும் துணையின்றிப் பிறக்கின்றான்.