பக்கம்:இலக்கியச் சாறு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 5:i.*ht 1. tnii ühtflèchsgriff

'இவ்வாறாகிப் பிறப்பதோ இதுவே மன்னர்க்கியல் வேந்துே (309) என அவன் பிறப்பின் அவலநிலை தேவரா, பாடப்பெறுகின்றதை நினைக. பிந்தாமணிப் பொருட் குறிப் { பாரதியில் காணப்பெறும் இடங்கள் இன்னும் சிலவுள.

தவழ்மதுக் கோதை மாதர் தாமரைப் பூவ தா: உமிழ்நகை வேலி னானும் ஒண்சிறை மணிவண்டு ஒத்தாள்

- சிந்தா. (191) தோயுமது நீயெனக்கு தும்பியடி நானுனக்கு - பாரதி பொன்னனாள் அமிர்த மாகப்புகழ் வெய்யோன் பருகியிட்டான். மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்.

- சிந்தா.(190)

பானமடி நீயெனக்கு பாண்டமடி நானுனக்கு - unwo கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்ட i முதற்

குலோத்துங்கன் கலிங்கவெற்றிக்குப் பரணி பாடியவர். குலோத்துங்க சோழனுடைய முன்னோர் பெருமைகளைச் சொல்லும்போது, கரிகாலன் இமயமலையைச் செண்டினால் அடித்துத்திருத்தினான் எனவும்,"பண்டு நின்றபடி நிற்க' என்று புலிப்பொறி பொறித்தான் எனவும் புலவர் படுகின்றார். கரிகாலனால் இமயம் அடிபட்ட கருத்தையே,

விண்ணை யிடிக்கும் தலையிமயம் எனும்

வெற்பை யடிக்கும் திறனுடையார் என்ற பாரதியின் தமிழ் வீரப்பாட்டு குறிக்கும். இவ்விடத்துக் கலிங்கத்துப்பரணி நினைவு பாரதியாருக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்று துணிதற்கு, அடுத்து வரும் சம்பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார்’ என்ற அடியே சான்றாகும்.'தவமே புரியும் வகையறியேன்” என்ற விநாயக நான்மணி மாலைப் பாடல் தவமே புரிந்திலன்' என்னும் திருவாசகப் போக்கை நினைவூட்டுகின்றது. சிலப்பதிகாம், திருக்குறள், இராமாயணம் ஆகிய முந்நூல்களிலிருந்து பதியார் மேற்கொண்ட பொருளும் சொல்லும் நெறியும் பலப்பல. அவற்றை விரித்துச் சொல்ல இஃது இ.ணனன்று: கட்டுரைக் கிடையே காண்க.