பக்கம்:இலக்கியச் சாறு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

வ.சுப. மாணிக்கனார்



இடமும் அழுத்தம் உடையன எனப்பட்டு, ஒரிடமும் பொருள் சிறக்காது காணவேண்டிவரும். நீர்வீழ்ச்சி பருந்தின் வீழ்ச்சிபோல, பாட்டில் கருத்துச் சீர்த்தவிடத்துத் தக்க சொற்களைப் புலவன் பெய்கின்றான்; அல்லது சொற்கள் வந்து விழுகின்றன. பொருள்களை முறையாகச் சொல்லித் செல்லும்போது, கருத்தழுத்தம் செய்ய வேண்டியக்கால், புலவன் சொல்லழுத்தம் செய்வான்; நெற்றிக்குத் திலகம் இடுவான். கவியின் உள்ளம் விளங்கித் தோன்றும்.

கொடியதுரியோதனன்கூடத்துகிலுரியும் இழிசெயலைத் தானே செய்ய விரும்பவில்லை. துரியோதனன் சொற்கேட்டு அச்செயல் செய்ய முன்வந்தான்துச்சாதனன்.அவன் கொடுமை கயமைகளை எப்படிக் காட்டுவது? எழுந்தவன் திரெளபதியின் ஆடையைப் பற்றினான் என்றால் தீமை புலப்படுமா?

துச்சாதனன் எழுந்தே-அன்னை துகிலினை மன்றிடை யுரிதலுற்றான் திரெளபதி துகில் என்னாது அன்னை துகில் என்று சொல்லுங்கால், தாயின் துகிலை உரிந்தவன் கொடுமை சட்டெனப்பதிவதோடு, சினவுணர்ச்சியும்தோன்றிவிடுகின்றது. “மன்றிடை யுரிதலுற்றான்’ என்றபோது, அவையின் சிறுமையும் உடன் தோன்றக் காண்கின்றோம். 'அன்னை என்றதனால் உரியத் தகாதவள் துகிலை உரிந்தான் என்ற குறிப்பும், இந்நிகழ்ச்சியை சொல்ல வந்த கவிஞனின் அறமும் புலப்படுகின்றன. துரியோதனனுக்குப் பாண்டவர்களைக் காட்டிலும் அன்னவர் பத்தினி மேல்தான் சினமிகுதி. அவளை இழிவு படுத்துவதே அவன் செயல்களின் நோக்கம். 'அன்று நகைத்தாளடா-உயிர் மாமனே அவளை என் ஆளாக் கினாய்’ என்று திரெளபதி அடிமைப்பட்டதில் அவன் தனி யுவகை அடைகின்றான். துரியோதனன் ஒரு வஞ்சகன். அவன் சொற்கள் நேர்பொருளும் தரும், மறைபொருளும் தரும். இம்மாந்தனை அங்ஙனம் அமைக்கவேண்டுவது புலவன் பொறுப்பு: சூதாட்டத்தில் திரெளபதி தருமனால் விற்கப்பட்ட பொருளாவாள் என்பது கதை.