பக்கம்:இலக்கியச் சாறு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

வ.சுப. மாணிக்கனார்



அவன் சொல்லுள்ளும் ஒலியுள்ளும் நடையுள்ளும் கவியுள்ளம் ஆழ்ந்திருக்கும். அவ்வுள்ளம் ஒரடியாழத்திலும் இருக்கலாம்; ஒராயிரம் அடி ஆழத்திலும் இருக்கலாம்; ஒரு பாடலிலும் இருக்கலாம்; பல பாடல்களிலும் தொடரலாம். ஒரு சொல்லிலும் இருக்கலாம்; சொற்றொடரிலும் சீரிலும் அடியிலும் அடிகளிலும் காணப்படலாம். பாரதி சொல்லுமாப்போல, கவியெனப் படுவான் உள்ளம் ஆழத்தில் கட்டாயம் இருக்கும். இக்கவியுள்ளத்தையே தொல்காப்பியர் 'நோக்கு எனமொழிவர்.இந்நோக்கின் ஆழத்திற்கும்.அழகிற்கும் மிகுதிக்கும் தகச் சுவைஞர்கள் புலவனைப் போற்றுப நோக்கு நயங்களை ஆசிரியனே கருதி வைப்பது உண்டு; அவன் புலமையால் அந்நயங்கள் தாமே அமைந்து விடுவதும் உண்டு. தாமே அமையுமாறு புலமையாற்றல்மிக்கபுலவன் நூலிலேதான் 'நவில் தொறும் நூல்நயம் ஊறிக் கொண்டிருக்கும்.

வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு மொழியால் தமிழ்ப்பற்றும் இனத்தால் தமிழர் பற்றும் நாட்டால் இந்தியப்பற்றும் கொண்டவர் பாரதியார் என்பது மேலையடிகளால் புலனாகும். இக்கோட்பாட்டிற்கு முரணில்லாமல் அவர்தம் பாடல்களுக்கு உரையும் நயமும் காணவேண்டும்.தமிழ் உலகமொழிகளுள் இனியது.அவ்வினிய மொழியின் பெயரால் மக்கள் தமிழரென அழைக்கப் படுகின்றனர். ஆனால் அம் மக்கட்கோ தமிழ் தெரியாது. அவரோ பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப்பான்மை கெட்டு வாழ்கின்றனர்.மொழிகளிற் சிறந்த தமிழால் பெயர்கொண்ட இம்மக்கள் நிலைமை மொழியின் பெருமைக்கே சிறுமை தரும். 'நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!’ என்று காரணப் பெயருக்கும் முரணான வாழ்க்கைக்கும் பொருத்தமில்லையே என்று கேட்கிறார் பாரதியார், வேறு எங்காவது போய் வேறு பெயர் சுமந்து வாழுங்களேன்: தமிழரெனப் பெயர் தாங்கி இங்கு இருக்காதீர்கள் என்று நாணச் சொல்கின்றார். “ஊமையராய்ச் செவிடர்களாய்க்