பக்கம்:இலக்கியச் சாறு.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

வ.சுப. மாணிக்கனார்



போல் ஒரு வார்த்தை' என்று துடிதுடித்தார் பாரதியார் இக்கருத்தைச் சொல்லியவனை விடாது வைது தூற்றிக் கொண்டிருப்பது புலவன் உள்ளம் அன்று காண். திறமையில்லை என்று சொல்லுபவர்களை நீங்களும் என்போல்இகழுங்கள் என்று ஏவிவிடுவது புலவன் நோக்கன்று காண். இப்படி ஒருவன் சொன்னான் என்றுநிகழ்ச்சியைக் சுட்டிக்காட்டித் தமிழ் மக்கட்கு மானவுணர்ச்சி ஊட்டுவதும், தமிழின் வசையைத் துடைப்பதும், அறிவுத்துறை நூல்கள் இல்லாக் குறையை நிறைவு செய்வதுமே பாரதியின் பாடல் நோக்கமாகும். -

என்றந்தப் பேதை யுரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ சென்றிடுவி ரெட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் பேதையுரைத்தான்-ஆ! வசை-திக்கெட்டும் ஒடுங்கள். திரட்டிக்கொண்டு வாருங்கள்-எனது ஆருயிர் மக்களே, என்று படைத் தலைவன் கட்டளையிடுமாறு தமிழ் மக்களை வேகப்படுத்துகின்றார் ஆசிரியர். பாட்டின் முதலடியில் சினவுணர்ச்சி-இரண்டாமடியில் மானவுணர்ச்சி-மூன்றாமடியில் மறவுணர்ச்சி - நான்காமடியில் மகிழ்வுணர்ச்சி என நாலுணர்ச்சிகளையும் இவ்வெர்ரு பாட்டினால் புலப்படுத்தி விடுகின்றார் பாரதியார். - தெளிவறம்

மன்னாய ஆழலைக்கண்டுகொதித்துப்பாடும்புலவன்தன் கோட்பாடு சேற்றில் எறிந்த கல்போல மக்கள் மனத்துக்குள் பாய்வதற்குப் பலமுறைகளைத் தேடிப் பிடிப்பான். அம்முறைகளின் வேறுபாடுகளைக் கண்டதும் மயங்கி அவன் கோட்பாட்டைத்திருத்திக் கூற முயலலாகாது.அவன் துணிந்த நோக்கத்திற்கிணங்கவே அம்முறைகளுக்குக் கருத்தை உய்த்துணரவேண்டும். அவன் நோக்கம் எது என்பதனை எப்படி முடிபு கட்டிக் கொள்வது? கற்பனைப் பூச்சும் உணர்ச்சித் துடிப்பும் மிகாத அறிவுநிலையில் சில அடிகள்