பக்கம்:இலக்கியச் சாறு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 187

பாடியிருப்பானன்றோ அப்பகுதிகளைக் கொண்டு ஒரு புலவன் கொண்ட இனவாய அறங்களைத் துணிந்துவிடலாம். வானத்தில் கரிய மேகக் கூட்டங்கள் வெண்ணிலாவை நோக்கி ஓடுகின்றன. தன்னைத் தாக்க ஓடிவரும் கருங்கூட்டத்திற்குள்ளே புகுந்து ஒண்ணிலவு நீல விதானத்து நித்திலம்’ என்றபடி, கருமேகத்தை ஒளி மேகமாக்குகின்றது. காண்கின்றார் பாரதிப் புலவர்.

தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே -நலஞ் செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ

வெண்ணிலாவே. இன்னா செய்தவர்க்கும் இனியவே செய்யவேண்டும் என்ற வள்ளுவம் இதனால் வெளிப்படை பகைவனுக்கருள்வாய்நன்னெஞ்சே-தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய் என்ற பாடலாலும் பாரதியறம் வெளிப்படை -

பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா பாதகரை மிதித்து உமிழ ஏவினாரெனச் சொற்கிடந்தாங்கு பொருள்கொள்ளமுடியுமா?இவர் பாதகர்பாதகரல்லர் என்று காணும் பகுத்தறிவுதான் பாப்பாவுக்கு இருக்க முடியுமா? முடியாததாதலின், பாப்பு (பார்ப்பு) நிலையிலேயே துணிவுணர்ச்சி யூட்டினார் பாரதியார் என்று நோக்கம் காண்பதே தகும். 'நையப்புடை' என்ற புதிய ஆத்தி சூடிக்கும் குறிப்பிதுவே. தேடு கல்வியிலாத தொரூரைத் தீயினுக் கிரையாக மடுத்தல்' என்ற அடிக்கும், கட்டாயக் கல்வியை, முன்பு கல்வி சிறந்த் தமிழ்நாடு முழுதிற்கும் இன்று வற்புறுத்தினார்.பாரதியார் என்றே கருத்துக்கொள்ளப்படும். பாரதீயத்துக்கு முரணாகாமல் உணர்ச்சி செறிந்த பாரதியார் கவிகட்குப் பொருள் காணுக. -