பக்கம்:இலக்கியச் சாறு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

வ.சுப. மாணிக்கனார்



மறைந்தன.முதற்கண் சமயவூழல்கள் நாறின.அருட்பாசுரங்கள் தோன்றக் கண்டோம்.வென்ற சமயங்கள் தம்முட் பூசலிட்டன, அப்போது சமயப் பொதுப்பாடல்கள் எழக் கண்டோம். தன்னாட்டுப்பற்றம் தன்னரசுப் பற்றும் தன்மொழிப் பற்றும் இருக்கவேண்டும் நம் மக்கட்கு இருக்கலாகாத் தற்சாதிப்பற்றே உயிர்க்குணம் ஆயிற்று. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்துப் பாட்டுக்கு ஏற்ற திய சூழ்நிலை முற்றி நின்றது. வீறிட்டெழுந்தார் புலவர் பாரதி.

ஆயிர முண்டிங்கு ஜாதி-எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி-ஒர் தாயின் வயிற்றிற் பிறந்தோர்-தம்முட் சண்டை செய்தாலும் சகோத்ர ரன்றோ என்று வினவினார். புதுக்குறைகளைப் பாடிய நிலையால் பாரதி பாட்டின் பொருள் புதிதாயிற்று சொல் புதிதாயிற்று; நடையும் புதிதாயிற்று குறை கண்டு கொதித்துப் பாடிய புலவன் புதுமைக் கவியாயினான். - விடுதலைமதம்

நாட்டுப்பற்று என்பது ஒரு பாரதீயம் பாரதியார் கண்ட நாடு பாரதநாடு. பாரதப் பெருநாட்டின் அக நாடுகளாகவே தமிழகத்தையும் இந்தியப் பிற பகுதிகளையும் நோக்கினார் பாரதியார். இந்தியா முழுவதும் அடிமைப்பட்டிருந்த நிலையில், தமிழக விடுதலையை மட்டும் பிரித்துப் பாடும் குறிப்பு 'யாதும் ஊரே யாவரும் கேள்ர் என்ற மரபு வழிவந்த தமிழ்ப் புலவனுக்குத் தோன்றாது.

தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்தி வாரீர் என்ற கொடிநிலைப்பாட்டில் அகநாட்டார் அனைவரையும் பாரதி அழைக்கின்றார். முப்பதுகோடி முகம் உடையாள், அறுபது கோடி கையுடையாள்,செப்புமொழி பதினெட்டு டையாள்; ஆனால் சிந்தனை ஒன்றுடையாள் என்று அறுதியிடும்பொழுது, வேற்றுமையில் காணும் ஒற்றுமை பாரதியின் பாரதப் பண்பு வெளிப்படை