பக்கம்:இலக்கியச் சாறு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

வ.சுப. மாணிக்கனார்



யூட்டும் இலக்கியந்தான் மக்கள் நெஞ்சையள்ளும். தருமன் பாரதநாடு கொண்டாடும் பழம் பெரியவன் என்றாலும் சூதில் தேயம் வைத்திழந்த அவனைப் பற்றிப் பாரதியார் என்ன கருதினார்?'சிச்சி சிறியர் செய்கை செய்தான்’ என்று மிகவும் இகழ்வர். தீயதுச்சாதனன் திரெளபதியின் கூந்தலைப் பற்றித் தெருவழியே இழுத்து வருகின்றான்;பார்க்கக் கூட்டம் கூடிவிட்டது. இது கொடுமை கொடுமை என்று கூட்டம் பார்த்துக் கொண்டே துடிக்கின்றது. இத்துடிப்பினால் என்ன பயன்? கொடியவனைக் காட்டிலும் அக்கொடுமையைக் கண்டும் செயலின்றித் துடித்து நிற்கும் கூட்டமே இகழ்தற்கு உரியது. இக்கூட்டம் என்ன செய்திருக்கவேண்டும்? நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார் ஊரவர்தங் கீழ்மை யுரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள் விலங்கா மிளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே பொன்னை யவளந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினார் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? நனவுக்கனவுகள் .

பாரதியார் ஒரு வெறிஞர். அவர் வெறி தடமற்ற காட்டாற்று வெள்ளம் போன்றதன்று கரையணைத்தோடும் காவிரி வெள்ளம் போன்றது. அவர்தம் பழமைப் பற்றில் ஒரு தனிப்புதுமையிருப்பக் கண்டோம். அவர்தம் பழநூற் பயிற்சியிலும் ஒரு தனிப் புலமையிருக்கக் காணலாம். சொல் வீழ்ச்சியும் ஒலி நயமும் நடைநயமும் நோக்காழமும் என்றிவையே முழுப் புலமையாகிவிடா. எதிரதை முன்னுணர்ந்து ஆற்றலோடு கூறும் அறிவுத் தெளிவு புலமைக் கூறுகளுள் தலைசிறந்தது. சென்ற வரலாற்றையும் நிகழும் போக்கையும் காணும் புலவன் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று மயங்காது முடிவு கட்டுவான்.

மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் (தொல். 1020)