பக்கம்:இலக்கியச் சாறு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு . - 201

சுதந்திரம் பெற்றதற்குப் புறச்சான்றுகள் என்ன? எல்லாரும் சமம்; எல்லாரும் ஒன்று: பொய்யான ஏமாற்றத்துக்கு இடங்கொடாமை; நல்லவரையும் பெரியவரையும் மதித்தல் நயவஞ்சகம் இல்லாமை; உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்பு: உழையாதாரை மதியாமை; நாமிருக்கும் நாடு நமது என்ற பற்று; இந்நாடு இனி நமக்கே உரிமை என்ற அறிவு:இந்தப்பண்புகள் எல்லாம் விடுதலையின் பயன்கள், அடையாளங்கள் என்று உரிமைக்குப் பின்னும் நாடு ஒருமைப்பாடு என்னும் உணர்வுப் பாடாக வளர்வதற்குரிய அடிப்படை நெறிகளைப் பாரதீயத்தில் காண்கின்றோம்.

பாரதியார் ஆங்கில ஆட்சியின் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் பெறுதற்கு விடுதலைப் பாடல்கள் முழக்கிய விடுதலைப் புலவர் என்றே பலர் கருதிக்கொண்டிருக்கின்றனர். அதனால், விடுதலை பெற்றுவிட்டோமே, இனி அவர்தம் செய்யுட்கள் முன்போல அவ்வளவு தேவையில்லை.என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இக்கருத்துக்கள் ஒரளவே உண்மை. ஆங்கிலத் தளையிலிருந்து விடுதலைக்குப் பாடினார் என்பதனை உடன்படுகின்றேன்.அவ்வளவில் அவர் நிற்கவில்லை. சாதிக் கொடுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமயப் பிணக்கு, ஏழை செல்வன், அறியாமை, கல்வியின்மை, ஆங்கில மோகம், தாய்மொழிப்பற்றின்மை, ஏய்ப்பு, நயவஞ்சகம்,உழைப்பின்மை முதலான பலதீமைகளிலிருந்தும் இந்தியப் பெருநாடும் மக்களும் முழுவிடுதலையடைய வேண்டுமென்று எதிர்காலத்தைப் பாடிப் பொழிந்தார். ஏன் இருவகை விடுதலையும் பாடினார்? உள் நாட்டுத் தீமைகளிலிருந்து விடுதலை பெறாவிட்டால், உரிமை பெற்ற பின்னும் சாதியும் ஏற்றத்தாழ்வும் கல்லாமையும் அயல்மொழி மோகமும் பெண்ணடிமையும் ஒரு நாடு என்ற உணர்ச்சி யின்மையும் இருந்தால் முன்பு போல் எந்த அயல் நாட்டாருக்காவது அடிமையாகி விடுவோமல்லவா? அதனாற்றான்.ஆங்கில அடிமை விடுதலையோடு இணைத்து நாட்டுத்தீமை விடுதலையும் பாடினார் எதிகால உணர்வு மிக்க பாரதியார். அவர் பாடியவற்றுள் ஒரு விடுதலை-ஆங்கில