பக்கம்:இலக்கியச் சாறு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 2O3

பெருஞ்சங்கமும் பொதுவுடைமையும் வேறு எங்கும் இல்லாமையால் ஒப்பிலாத ஒரு சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை எனவும், இன்ன புதுமை மக்களின் சிறுமைப்பாட்டினால் கெட்டுத் தொலையக் கூடாதே; ஒருமைப்பாடு வேண்டுமே என்ற எண்ணத்தால் வாழ்க’ என்றும் பாடியுள்ளார் எதிர்காலக்கவிபாரதியார்.சுரண்டலும் பசியும் இருக்கும் வரை பாரதம் இராது.இந்நாடு ஏன் வறுமைப் படல் வேண்டும்? எந்த வளங்களில் இந்நாடு குறைவுடையது? இந்நாடுஎல்லா வளமும் கணக்கின்றித் தருநாடு’ என்று மூன்றுமுறை வலியுறுத்துகின்றார். நாடுவளமுடையது, நாட்டில் பட்டினி ஏன்? எல்லோரும் வாழவேண்டும்; பசியார உண்ணவேண்டும் என்ற பொதுக் குறிக்கோள் இருந்தால் . பட்டினி இருக்குமா என்று சினந்து துடிக்கும் பாரதக் கவிஞர், ‘இனியொரு விதி செய்வோம், சுதந்திரம் பெற்ற பின்னும் காப்போம். பாரதன் ஒருவன் பட்டினியாகக் கிடந்தாலும் இப்பாரத நாட்டை மட்டுமா, உலகத்தையே அழிப்போம்” என்று பாரதீயம் பாடுகின்றார். எனவே பாரத சமுதாயம், ஒப்பிலாத சமுதாயம, முப்பது கோடியினர் சங்கம் என்ற ஒருமைப் பாடும் பெருமைப்பாடும் காக்கப்பட வேண்டுமென்றால், ஓர் இந்தியனும் பசி என்பதில்லாத தேசிய ஒருமைப்பாடு என்ற கட்டுப்பாடு வேண்டுமென்று எதிர்காலப் பாரதர்கட்குச் சமவழி காட்டிச் சென்றிருக்கின்றார் அடிமை நாட்டில் வாழ்ந்த நம் பாரதியார். சாதியின்மை

தேசிய ஒற்றுமைக்கு இடையூறாய் இருப்பது சாதி வேறுபாடு. வேண்டாத இவ்வேறுபாடு நம்முள் அடித்துக் கொண்டுநாம் அடிமைப்படுதற்குக் காரணமாயிற்று என்பதை அறிந்தவர் பாரதியார். சமயச் சண்டைகளும் நம் அடிமைக்கு மற்றோர் காரணம். 'சாதிச்சண்டை போச்சோ உங்கள் சமயச்சண்டை பேச்சோ, இங்ஙனம் அடித்துக் கொள்கின்ற உங்கட்குச் சுதந்திரம்வேண்டுமா? என ஆங்கிலேயன் இழித்துக் கூறுவதாகப் பாடியுள்ளார். ஆம்; உரிமைபெற்று முப்பது ஆண்டுகளாயிற்றே, சாதிச் சமயப் பூசல்கள் தேர்தல்