பக்கம்:இலக்கியச் சாறு.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 205

மொழி யொருமை

இப்பெரு நாட்டில் பல மொழிகள் உண்டு, பல இனங்கள் உண்டு என்ற வரலாற்றுண்மையை அறிந்தவர் பாரதியார்.பல மதங்களுண்டு என்பதனையும்.நன்குனர்ந்தவர்.பலமொழிகள், பலவினங்கள், பல மதங்கள் இவற்றை நாட்டின் வளங் களாகவும் பிரிவுகளாகவும் பாரதியார் மதித்தாரேயன்றி வேற்றுமையாகக் கருதவில்லை. சாதிகள், வறுமை, ஏழைமை இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்ததுபோல, பல மொழிகளும் இனங்களும் மதங்களும் இல்லாத இந்தியா வேண்டும் என்று அவர் பாடியதே இல்லை.இவற்றைப் பாரதத் தாயின் உறுப்புக்களாகப் போற்றினாரேயன்றி மறுப்புக் களாகத் துற்றவில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று அறுதியிட்டுக் கூறியதுபோல மொழிகள் இல்லையடி, இனங்கள் இல்லையடி, மதங்கள் இல்லையடி பாப்பா என்று அறிவுறுத்தவில்லை என்பதனைத் தேசிய ஒருமைவாதிகள் உணர்ந்து கொள்ளவேண்டும். -

வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு என்ற அடிகளிலிருந்து, பாரதநாட்டை வாழ்த்தும்போதே தமிழ்வாழ்க, தமிழர் வாழ்க என்று அடுக்குவதிலிருந்து பாரதியார் மொழியையும் இனத்தையும் போற்றுகின்றார் என்பது தெளிவாகும். - - : *

முப்பது கோடி முகமுடையாள்.உயிர்

மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள். மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ

மாநிலம் பெற்றவள் இஃதுன ராயோ குதலை மொழிக்கிரங்காதொரு தாயோ

கோமகளே பெரும்பாரதர்க் கரசே விதமுறு நின்மொழி பதினெட்டுங் கூறி

வேண்டிய வாறுனைப் பாடுதுங் காணாய்