பக்கம்:இலக்கியச் சாறு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வ.சுப. மாணிக்கனார்



தன்மகன் நோய்வாய்ப் பட்டு மெலிந்து போவதைப் பார்த்து மனமாறினாள் என்ற முடிவைப் புதியதோர் உலகஞ் செய்வோம்’ என்ற கதை சொல்லுகின்றது. திடீரென்ற மனமாற்றத்தால் பத்துவகையானத் தற்கொலைகள் நின்றுவிட்டன என்பதனையும் தற்கொலை வேகம் முதல் நொடியில் தோன்றும்; மறுநொடியில் ஒழியும் என்பதனையும் ‘ஒரு நொடியில்' என்ற என் நாடகத்தில் வலியுறுத்தியுள்ளேன். தீய முடிவுகளைச் சொல்லித் துன்பியலாக முடிவதுமட்டும் நடப்பியல் ஆகாது. எப்படி நடக்க வேண்டும் என்பதும் நடப்பியலுள் அடங்கும். இன்பியலாகவே முடிக்க வேண்டும் என்பது என்கருத்தன்று. துன்ப நிறுத்தமாக மனமாற்றவுத்தியைக் குடும்பவுறவில் பெரியவளவில் கடைப்பிடிக்கலாமே என்பது என் கருத்து. வீடணன் கும்பகருணன் கூறியவற்றை வீணைக்கொடியோன் இராவணன் நற்சிந்தனை செய்தான்; முதிய அரச கணவனின் படுதுயரை உணர்ந்து கைகேசி வரங்கேட்க விரும்பவில்லை; கண்ணபிரான் தூது சென்றதை மதித்து அரவக்கொடியோன் துரியோதனன் ஒரளவு ஊர்களை விட்டுக் கொடுக்க முன்வந்தான்; கடற்கானலில் மாதவியைக் கைந்நெகிழ்ந்த கோவலன் மனச் செம்மையனாய்க் கண்ணகி நல்லாளோடு புகார் நகரில் இல்லறம் நடத்தி மக்களைப் பெற்றான்; இவ்வாறு பேரிலக்கியங்களில் நிகழ் மாற்றங்கள் செய்வது மன்பதைக்கு வழி காட்டும் அல்லவா? எழுத்தாற்றல் என்பது யாது? அதன் பயன் என்ன?வாசகர்கட்குமனமெலிவைத் தாராதது, மெலிந்த மனத்தை நிமிர்த்துவது, புதுத்தெம்பு மின்னலைப் போல் பாய்ச்சுவது, தற்சிந்தனையைக் கிளறுவது, இதுவே எழுத்தின் அறுவடையாகும்.

உத்திகளின் மீட்சி -

   நெடிய தொல்லிய வளமான இலக்கியப் பரம்பரை நமக்கு உண்டு என இவ்வுரையின் தொடக்கத்துச் சுட்டினேன். கவிதை நாடகம் புதினம் சிறுகதை என வாங்கு இலக்கியம் எவ்வகையாயினும் உத்திகள் புழங்குபொருள் போல் அவ்வளவு பழமைப்பட்டு விடுவதில்லை. மனித மனங்கள் அடிக்கடி