பக்கம்:இலக்கியச் சாறு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

29



முன்பெல்லாம் ஆங்கிலச் சொல் அரிதே கலக்கும். சில ஆண்டுகளாகப் பத்தி பத்தியாகவும் பக்கம் பக்கமாகவும் ஆங்கிலத்தில் எழுதித் தமிழைக் கலக்குகின்றார்கள். தமிழ் எழுத்து வடிவில் எழுதிவிடுவதால் வெளிப்படையாகக் குறைபாடு தெரியவில்லை. யதார்த்தம் பேசுவோர் ஆங்கிலக் கலப்பை ஆங்கில எழுத்திலே எழுதுவார்களா? அப்போது அருவருப்பு ஏற்படும். உண்மைத் தோற்றம் தெரிவதற்காக இங்ஙனம் சுட்டிக் காட்டுகின்றேன்.

பாத்திரங்கட்குத் தக்க மருஉச்சொற்களை, வட்டாரச் சொற்களை, குழுவினச் சொற்களை நோக்கப்படி ஆளலாம். 'குறிஞ்சித்தேன்’ என்ற புதினம் படகமொழியிலும் புத்தம் வீடு, தலைமுறைகள், தலைகீழ் விகிதங்கள் என்ற புதினங்கள் வட்டார மொழிகளிலும் இருந்தாலும் மொழியெல்லைக்குள் அமைந்தவை. மொழிநடைகள் பாத்திரங்கட்குத்தக மாறலாம். இது இசைவானது. இதனை விடுத்துப் பாத்திரங்கட்குத்தகத் தமிழ் நூலில் மொழியே மாறும் என்பது எவ்வகையிலும் உடன்படத்தக்கதன்று.

எழுத்துச்சான்றோர்களே, என் சுருக்கமான இன்றைய வேண்டுகோள் இதுவே. முடிந்தவரை தமிழ்ச் சொற்களைக் கூடுதலாகப் பயன்படுத்துங்கள். எழுத்தாளர் கலக்கும் ஆங்கில முதலான அயற்சொற்கள் தேவையற்றவை. அவற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்கள் பலவுள. உள்ள நல்ல தமிழக் கிளவிகள்கூட வாழ வாய்ப்பும் உரிமையும் தமிழெழுத்தாளர்களே வழங்காதிருப்பது அரக்கமாகும். ஆங்கிலச் சொற்கள் கலந்த நூல்கள் மறுபதிப்பாகும்போது நல்ல தமிழாக மாற்றுங்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஈடுகளும் பிறவும் மணிப்பிரவாளமாக இருந்தமையின் சென்னைப் பல்கலைக்கழகம் அவற்றைத் தமிழாக்கம் செய்த வரலாற்றை நினைவு படுத்த விரும்புகின்றேன். ஒருவர் கூறினார், சில தமிழ்ப்புதினங்களை ஆங்கிலப் படுத்துவது எளிது; செய்யவேண்டியது எழுத்து மாற்றந்தானாம்.

'மாவண் தமிழ்த்திறம் என்று மணிமேகலைச் சாத்தனார் மொழிந்தபடி, தமிழுக்குப் பல துறைகளைச் சொல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/31&oldid=551029" இலிருந்து மீள்விக்கப்பட்டது