பக்கம்:இலக்கியச் சாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2. இலக்கிய முத்திறன்


இன்று நாம் வளர்க்க முனையும் எல்லாத் துறைகளும் தமிழ் மொழிக்குப் புதியனவல்ல. சில துறைகள் வேரோடிப் பரந்தவை; சில துறைகள் விழுந்துவிட்டவை; சில துறைகள் பிஞ்சளவில் வெம்பியவை; சில துறைகள் அரும்பளவில் நின்றவை; சில பல துறைகள் அயல் விதைகளின்று எழுந்தவை. தமிழைத் தொன்மொழிகளுள் ஒன்றாகப் பாராட்டி, ஞாலமொழிகளுள் ஒன்றாக உயர்த்த விரும்பும் நம் முயற்சிக்கிடையே முன்னரே பண்பட்ட பகுதிகளை மறத்தல் கூடாது. ஒரு துறையை அதன் முன்னை நிலையை அறிந்து வளர்ப்போமாயின், வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று' என்பதுபோல்,தமிழும்வளரும்:தமிழால் அத்துறை புதிய உரம் பெற்று உலகப் பயனும் செய்யும். தொன்மை இலக்கியச் செல்வம் பெற்ற மொழிகளுள் தமிழும் தன்னேரிலாத ஒன்று. சங்கங்கள் வைத்தும், அகம் புறம் எனத் திணைகள் வகுத்தும், ஆயிரத்துக்குமேலான புலமைச்சான்றோர்களைப்படைத்தும் வளர்ந்தது நம் இலக்கியம். இத்தகைய நீண்டுயர்ந்த ஆக்கம் திறனாய்வின்றி அமையாது.


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்


என்று வாழ்க்கைத்திறன் கண்ட நம் முன்னோர் அவ்வாழ்க்கையைப் பொருளாக உடைய இலக்கியத் திறனையும் கண்டிருந்தனர். ஆதலின் இலக்கியம் பற்றிய திறனாய்வு தமிழுக்குப் புதிய துறையன்று என அறிக.


திறத்துறை


இலக்கியத்தினின்றும் வேறானதன்று இலக்கணம்; ஒரு செய்யுட்கண் ஐந்திலக்கணமும் உள. எனினும் அகத் தன்மையான இலக்கணத்தைத் தனித்துறையாகக்


பேரறிஞர் சேதுப்பிள்ளை வெள்ளிவிழா மலர்-1961

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/33&oldid=551031" இலிருந்து மீள்விக்கப்பட்டது