பக்கம்:இலக்கியச் சாறு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

37



ஒழுங்குபடுத்திக் கொண்டு நூல் எழுதுவான். தன்னைக் கட்டுப்படுத்திய ஒருவன் செய்யும் நூல் மன்னாயத்துக்குக்கேடு விளைக்காது.

அவையடக் கியலே அரில்தபத் தெரியின்

வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்று

எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே என்பர் தொல்காப்பியர். நேர்நின்று நூலொப்புதல் பெற வேண்டுமாதலின், புலவன் மிகப் பணிவோடு அரங்கினோரை மதிக்க வேண்டியவனாகின்றான். இந்த அகத்திறனில், சில புதுக்கூறுகள் மரபுக்கு ஒவ்வா என்று அரங்குப் புலவோர் மறுக்கலாம்; காழ்ப்பின் காரணமாக இல்லாக் குறைகளை ஏற்றலாம்; விரைந்த இலக்கிய வளர்ச்சிக்கும் நூல்களின் பெருக்கத்திற்கும் இடையூறாகலாம். இக்குறைபாடுகள் முன்சொல்லியபடி, அகத்திறன் என்ற முறையின் குறைகள் அல்ல. 'திருத்தங்கள் கூறுவாராயின் மனமுவந்து செய்ந்நன்றியோடு வரவேற்பேன்’ என்று முன்னுரையில் இன்றும் பலர் எழுதுவர். இதனால் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற நல்லுணர்ச்சி எழுத்தாளர்க்கு இயல்பாக உண்டு என்பது பெறப்படும். ஆயிரக்கணக்கான படிகளை அச்சாக்கி நாட்டில் பரவ விட்டபின், திருத்திக்கொள்ளும் ஆசைக்குப் பெரும் பயனில்லை. நம் நூலின் பிழைகளை அறிந்த கொள்வதற்காகவா எண்ணிறந்த படிகளை அடித்து வெளியாக்குகின்றோம்? ஒருகால் மறுபதிப்பில் சில திருத்தங்கள் செய்யலாம். பெரிய திருத்தங்கள் செய்வதற்கு யார்க்கும் மானவுணர்ச்சி இடங்கொடாது. செவ்விய நூலை மன்னுலகிற்கு அளிப்பதுவே எழுத்தாளரின் தலையாய ஒழுக்கமாகும். நாம் எழுதும் கடிதத்தைக்கூட அஞ்சற்படுத்து முன், பிறரைப் பார்க்கச் செய்கின்றோம். எனின், மன்குல வுடைமையாகும் நூலுக்குச் செப்பம் மிக இன்றியமையாதது என்று கழறவும் வேண்டுமோ? நூற்செம்மை ஒருவனாலோ ஊராலோ அமையாது. அரங்கேற்றம் போன்ற குறிய நடுநிலை அமைப்பினாற்றான் அமைய முடியும். நூலின் மூலத்தைத் துய்மை செய்யும் இவ்வகத் திறனை எந்த அளவிலேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/39&oldid=551037" இலிருந்து மீள்விக்கப்பட்டது