பக்கம்:இலக்கியச் சாறு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

வ.சுப. மாணிக்கனார்



இருக்குமாயின், உரைநடையாற்றல் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? மலையேறிக்குச் செய்குன்று ஏறல் பாரமா? துறைமன்றங்கள்

தமிழ் வளரா, வளரவிடாக் குறைவை யுணர்ந்து அதனைக் குறைவிலா நிறைவாகவும் கோதிலா அமுதாகவும் ஆக்குதல் தமிழ் இலக்கிய ஆசிரியர்களின் கடமை மட்டுமன்று: பிற துறையாசிரியர்களின் பொறுப்பும் ஆகும். தமிழுக்குக் குறைவு இலக்கியமன்று; பல்துறை நூல்களே. இக்குறைவை நிறைவாக்க வல்லுநர் பிற துறையாசிரியர்களே. அவர்களை இத்தொண்டுக்க ஊக்குவதும் சொல்லும் நடையும் காட்டி உதவுவதும் தமிழாசிரியர்களின் கடனாகும். ஆதலின் என் கருத்து பொறியியலாசிரியர் தமிழ் மன்றம் வேதியலாசிரியர் தமிழ் மன்றம் மருத்துவ ஆசிரியர் தமிழ் மன்றம் வணிகவியலாசிரியர் தமிழ் மன்றம் எனவாங்குத்துறைதோறும் தமிழ் மன்றங்கள் தோன்ற, தோன்றித் துறைக் கட்டுரைகளும் துறைப்பாட நூல்களும் துறைப் பொது நூல்களும் எழுத, இம்மன்றம் வழி செய்யவேண்டும். ஆர்வலர்களைத் துறைமன்றம் கூட்டி ஊக்கவேண்டும். ஆண்டிகள் கூடிக் கட்டினால் கட்டுவது மடமாக இருக்கும்;அவ்வளவுதான். தமிழாசிரியர்களாகிய நாம் கூடி எது வளர்க்க முற்பட்டாலும், அஃது இலக்கிய வளர்ச்சியாகவே அமையும். தமிழுக்குக் காலத்தினால் செய்ய செய்விக்க வேண்டிய நலம் அறிவியல் துறையாக்கமே. தமிழுக்கு உண்மையான குறைவு இது என்பதனை உணர்ந்து, துறைகள் பயின்ற பிற தமிழர்களுக்கு இதனை உணர்த்தி, துறைத் தமிழ் மன்றங்கள் பல தமிழகத்தில் தோன்ற நம் மன்றம் வழி காட்டுமாக. இடைக்காலம்

கருத்தரங்கின் இரண்டாம் நாளாகிய இன்று இடைக்கால இலக்கியம் பற்றிக் கேட்கக் குழுமியிருக்கின்றோம். தமிழ் இலக்கிய வரலாற்றில் இடைக்காலம் என்பது எது? அக்கால அளவு என்ன? ஏறக்குறைய கி.பி. நாலாம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பதினைந்து நூற்றாண்டுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/44&oldid=551042" இலிருந்து மீள்விக்கப்பட்டது