பக்கம்:இலக்கியச் சாறு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

47



சேனாவரையர் போலன்றி நச்சினார்க்கினியர் பல்லுரையாசிரியர் ஆனார். இடைக்காலம் வெள்ளம்போல் நூல் நூலாகப் பெருக்கியிராவிட்டால் தமிழ் இலக்கிய வரலாறு வாழ்ந்து முறிந்த வரலாறாக, குழந்தை கையடக்க நூலாகவே குறுகியிருக்கும்; இறையனாரகப்பொருள் உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் கூறுகின்ற வரலாறளவாகவே நிற்கும். ஆதலின் இடைக்காலம் என்பது தமிழுக்கு இலக்கிய நூலாசிரியர்களைப் பெருக்கிவிட்ட புரட்சிக்காலம்மழைக்காலம் என்று உணர வேண்டும். பாவினம்-பாவளர்ச்சி

இடைக்காலத் தமிழ் வளர்ச்சியில் இன்னொரு பெரும் பயனை - புரட்சியான ஆனால் பொன்னான மாறுதலை நினைப்போமாக.இடைக்காலம் யாப்பிற்புரட்சிகண்டகாலம். சங்க யாப்பு திட்பமுடையது, செறிவுடையது, கட்டுக்கோப்பானது, மாற்றத்துக்கு இடந்தராதது. இவ்வமைப்பு மூவேந்தர் தலைமுறையாக ஆண்டு சங்கக் கல்வி நெறி முறையாகப் பயின்று வந்த காலத்திற்கு ஏற்றதாக இருந்தது. முற்றும் மாறிய நிலைக்கு ஏற்பத் தமிழை மாற்றி வளர்த்துக் காத்தனர் இடைக்காலச் சான்றோர்.இடைக்காலத்

தமிழ், நடையழகும் தொடையழகும் பெற்று, எப்பொருளையும் கலகலத்துச் சொல்லும் நெகிழ்ச்சியுற்றது. பாவினங்களையும் நூலினங்களையும் பெருக்கித்

தமிழினத்தைக் கவியினமாகவே புதுக்கியது. இன்றும் நம் மக்கட்குக் கவியரங்கம் கேட்கும் ஈடுபாடு உண்டு என்றால், திரைப்பாடல் கேட்கும் விழைவுண்டு என்றால், இம்மனப்பான்மை நமக்கு இடைக்கால வழி வந்தது என அறியவேண்டும்.

பேச்சிலக்கணம் கற்றபின் நாம் பேசத் தொடங்கவில்லை. செவிக் கேள்வி வாயுரையாகின்றது. பேச்சு உரைநடையா செய்யுளா என்பது கேள்விச் சூழ்நிலையைப் பொறுத்தது. இடைக்காலத்தார் நெஞ்சம் செய்யுளாக இருந்தமையின் செய்யுட்சூழ்நிலையே புலவர் குடும்பங்களில் பெருகியிருந்தது. குழந்தைகளை நன்கு படிக்க வைக்க விரும்பிய பெற்றோர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/49&oldid=551047" இலிருந்து மீள்விக்கப்பட்டது