பக்கம்:இலக்கியச் சாறு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

வ.சுப. மாணிக்கனார்



புலவர் குடும்பங்களில் சேர்த்து விட்டனர். 'குழந்தையும்

கவிதையும் கொண்டாடும் இடத்தில் வளரும்’ என்ற கருத்து எழுவதாயிற்று. காரிகை கற்றுக் கவிபாடுவது இகழப்பட்டது. பாடங்கேட்பதற்கு முன்பே பாடத் தெரியவேண்டும் என்ற நிலை எதிர்பார்க்கப்பட்டது. “குடக்கோடு வானெயிறு கொண்டார்க்கு’ என்ற வெண்பாவை யாத்துவிட்டுப் பாடங்கேட்டார் சிவப்பிரகாசர். நமக்கு உரைநடைப் பேச்சு எப்படி, அப்படிச் செய்யுள் யாப்பு இடைக்காலத்தார்க்கு, எழுத்து என்பதும் படிப்பு என்பதும் எல்லாம் அவர்கட்குக் கவியே. ஆதலின் நாள்தோறும் பாடிக்கொண்டே இராவிட்டால் யாப்பு வராது என்ற நிலை அவர்கட்கு இல்லை.

ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெலாம் நீடுங் குடையைத் தரித்த பிரான்இந்த நீணிலத்தில் என்று ஒட்டக்கூத்தர்பாடும்போக்கைப்பார்த்து, ஒரு கணமும் தயங்காமல் சிந்தனைக்கு நேரம் கொடாமல், இடைமறித்துக் குலோத்துங்கன்,

பாடும் புலவர் புகழொட்டக் கூத்தர் பதாஅம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென்றே என்னைக் கூறுவரே என்று இரட்டையர் போலப் பின்னிரண்டடியைச் சேர்த்து முடித்து விட்டான் என்றால், இடைக்காலக் கவிதை மனத்தின் இயக்கம் தெள்ளத் தெளியலாம். இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டா காதோ’ என்ற வீறாப்பு உருட்டுப் புரட்டன்று. கவிதை வெள்ளமாக இடைக்காலத்து ஒடிப் பரந்தது. பயிற்சி நூல்கள்

எவ்வகைக் கவிதையும் பாடும் வன்மை வேண்டும் என்பதற்காகவே சிற்றிலக்கியங்கள் பாவின அடிப்படையில் அமைந்துள்ளன. கலம்பகம் பதினெட்டு உறுப்புடைய இலக்கியம். இதனைப் பாடுவாருக்க ஏறக்குறைய எல்லாப் பாக்களும் பாவினங்களும் யாக்கத்தெரிய வேண்டும். மும்மணிக்கோவை நான்மணிமாலை இரட்டை மணிமாலை எல்லாம் செய்யுட்பயிற்சி காட்டும் நூல்களே.குறமும் பள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/50&oldid=551048" இலிருந்து மீள்விக்கப்பட்டது