பக்கம்:இலக்கியச் சாறு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வ.சுப. மாணிக்கனார்



பிள்ளைத் தமிழ் என்று உயிர்ப்பித்திருக்கக் காண்கின்றோம். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நீதிபதி வேதநாயகனாரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து,

'பொருந்த உலகர் வழக்கோர்ந்து

பொய்யிது மெய்யிதென்று திருந்த எழுதும் திறல்வேத நாயகச் செம்மல்.’ 'நாட்டுக்கு நல்லன் பதினாயிரம்

பொன் நவிலுமொரு பாட்டுக்கு நல்கும் புகழ்வேத

நாயகப் பண்பன் என்று குளத்துார்க்கோவைபாடி, கோவையை மக்கட் கோவையாக்கினார்.

தமிழுணர்வு

இடைக்கால இலக்கிய வகை உலகியலோடு தொடர்பு பட்டால் எதிர்காலத் தமிழுக்கு ஏற்ற வழிகாட்டி, தூது என்ற இலக்கிய வகையால் எவ்வளவோ கருத்துக்ளை இனிமையாகப் பரப்பலாம்.

பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகிண்டு எஞ்சியழுக் கேறா இயற்கலையே - விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம் தீயாது சொல்விளையும் செய்யுளே’

'தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள் உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந்துரைக்கும் விண்ணப்ப முண்டு விளம்பக்கேள்' - என்ற தமிழ்விடுதூது இன்றும் நாளையும் வரும் தமிழினத்தார்க்கு வி டுக்குந்துதல்லவா? என்ன சொல்வளம்! என்ன சொல்மாயம்: சங்ககால மக்கட்குத் தமிழ்மொழி இயல்பானது. ஆதலின் அதன் அருமையை அறியும் வாய்ப்பில்லை. இடைக்கால மக்கட்குத் தமிழ் அருந் தமிழ், தீந்தமிழ்,ஒண்டமிழ், வண்டமிழ். ஏன்? நிழற் பெருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/54&oldid=551052" இலிருந்து மீள்விக்கப்பட்டது