பக்கம்:இலக்கியச் சாறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தேவர்கள் படும்பாடு

திருமால் முதலான தேவர்களின் நிலைபற்றி மாணிக்கவாசகரின் உள்ளத்தையும் திருவாசகத்தின் ஒட்டத்தையும் வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம். திருவாசகம் சமய நூலாயினும் இக் கட்டுரை சமயநோக்கில்எழுதப்படவில்லை.ஆசிரியரின் உள்ளங் காணும் திறன் முறையில் எழுதப்படுவது. இதனை உளங்கொண்டு இந்த ஆய்வினைப் படிக்குமாறு வேண்டுகின்றேன்.

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஒட்டுகந்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்

(திருவம்மானை) சந்திரனையும் இந்திரனையும் எச்சனையும் ஞாயிற்றையும் ஏனைத் தேவர்களையும் பல்வேறு உறுப்புக்களைத் தேய்த்தும் நெரித்தும் தகர்த்தும் நாலாறு திசையாக ஓடும்படி செய்து அதனைப் பார்த்து உவப்படைந்தான் சிவன் என்று திருவாசகம் பாடுமேல், அத்தேவர்களின் அடிப்படைக் குற்றங்கள் என்ன, அன்னோரைப் பாட்டில் வைத்துப் பாடாகப்படுத்தும் திருவாசகத்தின் உட்கிடை என்ன என்பன பற்றி நாம் ஒரு தெளிவு பெற வேண்டும். தலைவர் மூவர் -

முதற்கண் திருவாசகத்தில் தேவர்களைக் குறித்து வரும் செய்திகளையும் அவ்விடங்களில் ஆளும் மொழி நடைகளையும் காண்போம். புராணப்படி, தேவர்கள் இந்திய

ஆரூர்க் கனகசபைப்பிள்ளை மணிவிழாமலர்க் கட்டுரை-1973,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/72&oldid=551070" இலிருந்து மீள்விக்கப்பட்டது