பக்கம்:இலக்கியச் சாறு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

77



ஒன்றும் வேண்டும் இப்போக்கு வஞ்சகம் ஆகும்.இறைவனைத் தள்ம் வழிபடுவதைவிடுத்து, பிறவுயிரெல்லாம் தம்மை வழிபடவேண்டும் என்று நினைப்பதும், சிவன் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பரவுவதும் கயமையிலும் கயமை.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் என்றார் திருவள்ளுவர். இக்குறளின் விரிவே திருவாசகத்தின் ஒரு பகுதி என்று கொள்ளலாம். திருவாசகப்படி ஆணவம், மதியாமை, தன்னல அதிகாரம் என்ற முக்குற்றங்கள் உடையவர்களே தேவர்கள் ஆதலின் இச்சிறுமையுயிர்கட்கு இறைவன் முன் வந்து காட்சியளிப்பான் என்று எதிர்பார்க்க முடியுமா?’கனவிலும்தேவர்க்குஅரியாய் போற்றி","கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்’ என்று தேவர்கட்கு இறைவனது முற்றருமை பேசப்படுகின்றது.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லகர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்தேன் என்ற பிறப்புப் பட்டியலால் மணிவாசகர் தேவனாகப் பிறந்த அருஞ்செய்தியையும் நாம் அறிகின்றோம். எனவே தேவரைப்பற்றி அவர் பாடும்போது அப்பிறப்பின் அனுபவ அறிவும் அவர்க்கு உண்டு என்பதனை நாம் உடம்பொடு புணர்த்தலாகக் கொள்ள வேண்டும்.

மானிடப்பிறப்பு

இறையருள் பெறுதற்குத் தேவுப் பிறப்பு முற்றும் இடையூறாகும். அப்பிறப்புக்கு இறைவன் ஒரு நாளும் காட்சியளியான்.அவன் வெறுப்புக்கு உள்ளான பிறப்பு வானப் பிறப்பு: அவன் வெறுப்புக்கு உள்ளான உலகம் வானுலகம். அவன் விரும்பும் பிறப்பு மனிதப் பிறப்பு: விரும்பும் உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/79&oldid=551077" இலிருந்து மீள்விக்கப்பட்டது