பக்கம்:இலக்கியச் சாறு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவாசக நினைப்பு

யாருடைய நல்வாழ்வுக்கும் ஒரு பெரியவர் தொடர்போ ஒரு பெரிய நூலின் தொடர்போ இன்றியமையாதது. இரு தொடர்பும் ஒருங்கே ஒருவர்க்குக் கிடைக்குமாயின் வாழ்க்கைக் கடல் இருகரையுடையதாகும். இத்தொடர்புக்கும் வாழ்க்கையுயர்வுக்கும் உறவுண்டு.

வாழ்வாங்கு வாழ்தல் என்பது என்ன? நினைப்பாங்கு நினைத்தல் ஆகும். நினைவு ஒரு பிறப்போடு அற்று விடுவதில்லை எனவும் ஒரு பிறப்பின் எண்ணங்கள் வரும் பிறப்புக்களிலும் தொடக்குற்று வாழ்வினை இயக்கும் எனவும் சமய நூல்கள் பகர்கின்றன. ஏது நிகழ்ச்சி’ என்று மணிமேகலைக் காப்பியம் இதனைக் குறிக்கும். தங்கள் துன்பத்தைத் துடைத்தோரின் நட்பினை ஏழு பிறப்புகளிலும் நினைவு கொள்வர் எனவும் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி எழுமையும் தொடரும் எனவும் எண்ணப் படர்ச்சியைத் திருக்குறள் பலவிடங்களிலும் அறிவுறுத்துகின்றது. உயிர் இருந்தாற்கூட நினைவிழந்து விட்டால் வாழ்கின்றான் என்று அவனைச் சொல்வது வழக்கில்லை. எனவே நினைவியக்கமே வாழ்வியக்கம் என்பது தெளிவு. -

எது சிந்தனை - - - * 'உண்மையே கடவுள்' என்று பெருமகன் காந்தி அறுதியிட்டதுபோல், நினைவே வாழ்வென்றால், அந்நினைவு எவ்வண்ணம் இருத்தல் வேண்டும். எங்ஙனம் இருத்தலாகாது என உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் மக்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன் எனவும்"ஊனார்புழுக்கூடுஇதுகாத்து இங்கு

காரைக்குடி வள்ளல் இராமசாமிசெட்டியார் -

எண்பதாம் ஆண்டு அணிவிழாமலர்-1982

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/81&oldid=551079" இலிருந்து மீள்விக்கப்பட்டது