பக்கம்:இலக்கியச் சாறு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

வ.சுப. மாணிக்கனார்


-

இருப்பதானேன்’ எனவும் ஊண் வாழ்க்கையை 26ಳೆ; வாழ்க்கையாகத் திருவாசகம் இகழ்கிறது. தேடிச் சேர்று நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசும் வேடிக்கை மனிதரைப் பாரதியார் வசை பாடுவர். ஆதலின் உண்பது உறங்குவது ஊடுவதெல்லாம் எண்ணமென்றோ நினைவென்றோ சொல்ல முடியாது. இந்த நாள் நடப்பெல்லாம் சிந்தனைப் பெயர் பெற்றால், மரம் செடி கொடி பறவை விலங்கின்ம் எல்லாம் சிந்தனையாளிகளாய் விளங்காவா? ஒருவன் உண்ணல் தின்னல் உறங்கல் இவற்றைக் குறித்த நேரத்திற் செய்வதற்கு எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்று திருக்குறளை மேற்கோள் காட்டினால் கேலி செய்வது ஆகுமன்றோ? ஆதலின், எண்ணம் நினைவு சிந்தனை என்று நாம் குறிக்கும்போது, நாட்கடமைக்கு அப்பாற்பட்ட மனத்தாண்டுதல்களைக் கருதுகின்றோம் என்ற வரம்பைப் புரிந்து கொள்வோமாக. மனவளம்

நிலத்திற்கு மேல் எல்லாமே வானந்தான். எனினும் வானத்திற் பறந்தது, வானளவியது என்று கூறுங்கால், குறிப்பிட்ட ஒரெல்லைக்கு மேற்பட்ட உயரளவையே சுட்டுகிறோம். இம் மனவளர்ச்சி பெரும்பாலோர்க்கு இல்லை. மெய்ம்மை காணின், பெரும்பாலோர் தம்மனவளம் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒரு சிலர்க்கு மனமெனும் ஓர் உள்பொருள் இருப்பதான எண்ணச் சுவடே இல்லை. நெஞ்சுவலி வரும்போது நினைப்பார்களோ என்னவோ? அதனாற்றான் தொல்காப்பியம் இச்சிறிய மாந்தரை ஐயறிவுடைய மாக்கள் என்று அழைக்கும். தமிழியலின்படி மானுடவடிவு உயர்திணையாகாது.உணர்மனம் உடையோரே உயர்திணை என்ற மேற்றிணைக்கு உரியர் மக்கட்குலம் என்ற தனிமதிப்புப் பெறுவர். ஆதலின் நம் பிறப்பு உயர்தினைப் பிறப்பாக உருப்பட வேண்டின், நல்ல தூய உயர்ந்த எண்ண விதைகளை நம் மனப் பண்ணையில் வித்தி வளர்ந்து வளமார் கதிர்களைப் பெறல் வேண்டும். இவ்வுண்மையை உணர்த்தவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/82&oldid=551080" இலிருந்து மீள்விக்கப்பட்டது