பக்கம்:இலக்கியச் சாறு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

81



மெய்ம்மையாம் உழவைச் செய்து

விருப்பெனும் வித்தை வித்திப் : பொய்ம்மையாம் களையை வாங்கிப்

பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு

தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகிற்

சிவகதி விளையு மன்றே என அப்பரடிகள் உழவுப்பாடல் இயற்றினார்.

நிலபுலங்கட்கு வித்துக்கள் தேவைப்படின் அரசு வைத்திருக்கும் வித்து விற்பனைக்கிடங்குகளை நாடிப் பெறுவர் உழவர். சிந்தனை வித்துக்கள் எங்கே கிடைக்கும்? விற்பவர் யார்? விலை என்ன? இதோ திருவாசகம்! நிகரற்ற, விலை வேண்டாச் சிந்தனைக் கிடங்கு எண்ணவியலா எண்ணக் களஞ்சியம்; யாரும் நண்ணத்தக்க நாற்றங்கால்: “கடலினுள் நாய் நக்கியாங்கு எனவும் 'வெள்ளத்துள் நாவற்றியாங்கு’ எனவும் சொல்லியபடி, எவ்வளவு சிந்திக்க அள்ளிக் கொண்டாலும், அப்பாற்பட்ட சிந்தனையுயர்ச்சிக்கு உரிய வேராழமும் வேர்ப்பரப்பும் வேர்ப்பன்மையும் திருவாசகக் குளத்தில் உண்டு. -

நினைவே வாழ்வாதலின், நல்வாழ்வுப் பயிற்சி பெற விரும்புவார், திருவாசக எண்ணங்களை அடிக்கடி மனக்கணத்துப் பயில வேண்டும். எல்லோர்க்கும் பெரியோர்கள் தொடர்பும் உறவும் கிடைப்பதில்லை. யான் என்னும் செருக்கால் ஒரு சிலர் யாரையும் பெரியோராக ஏற்றுக் கொள்வதில்லை. அங்ஙனம் கொள்வது தம் பெருமைக்குக் குறைவாகும் என்ற உட்கருத்தாளரும் உலகில் இல்லாமல் இல்லை. ஆனால் திருவாசகம் போன்ற அரிய பெரிய நூல்கள், காட்சிக்கு எளிமையாகவும் கைக்கு அடக்கமாகவும் நம்முன் கிடக்கின்றன. அவற்றோடு ஒரு சில நொடிகள் நட்பாடினாற்கூட, வாழ்வில் கலக்கம் கலங்கிக் கவலை நீங்கித் தெளிவு கிடைக்கும். இந்நூல்களை 'இலங்குநூல் என்பர் திருவள்ளுவர் ஒண்மைசால்நூல்கொடு

தி. 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/83&oldid=551081" இலிருந்து மீள்விக்கப்பட்டது