பக்கம்:இலக்கியச் சாறு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

வ.சுப. மாணிக்கனார்



திருப்பொன்னூசல், திருக்கோத்தும்பி என்ற உலகியல் வடிவுடையனவாதலின், மக்களின் பழக்க வழக்கங்களோடு ஒட்டியும் உராய்ந்தும் தெளிவாக விளக்கும் பொதுமரபையும் பண்டிதமணியார் தழுவிக் கொண்டனர். வேத்தியல் பொதுவியல் என இரு பாகுபாடு இருப்பதுபோல, மெய்யியலும் உலகியலும் இணைந்த ஏற்றம் இப்பேருரைக்கு உண்டு.

“அடிகள் அரசியல் வினைத்திறமை படைத்தவராதலின், உலகத் தலைவர் பணியாளர் வாணிகத் தொழிலாளர் முதலியோரின் குணஞ்செயல்களையும் மற்றை உலகியல்களையும் உரிய இடங்களில் தழுவியும், ஒருசில இடங்களில் அவற்றுக்கு மாறாகக் கொண்டு இறையருட் செயல்களைப் புலப்படுத்தும் இருத்தல் அறிந்து இன்புறத்தக்கது” என்று தம் உரைநெறியைப் பண்டிதமணியே சுட்டிக் காட்டுவதை எண்ணுக. உரைநிறை

பண்டிதமணியின் உரை திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை என்ற மூன்று பகுதிகளுக்கு முழுமையாக வுண்டு. இவை அவர்தம் காலத்திலே அச்சாகி வெளிவந்துள. திருவம்மானை இரண்டு பாடல்கட்கு மட்டும் எழுதியவுரை கைப்படியாகவுளது. சிறுபருவந் தொட்டே அருமருந்தன்ன திருவாசகத்தைச் சிறப்பு முறையில் பயின்று அவைக் களங்களில் பல்லாண்டு பன்னூறு சொற்பொழிவுகள் நயம்படப் பொழிந்திருந்தாலும், பண்டிதமணியார் கதிருரை எழுதத் தொடங்கிய காலம் அவர்தம் 65ஆம் முதுமை ஆண்டிலாகும். 73ஆம் அகவையில இறையடி நிழல் எய்தினர். எனவே மேற்சுட்டிய மூன்று பகுதிகளும் ஏழாண்டளவில் இடைவிடா முயற்சியால் வலிநோய்க்கிடையே வரையப்

L_st-L-66) Glf,

முழுமை நோக்கில் இம்மூன்றிற்கே உரை இருப்பினும், திருவாசகத்தின் உண்மைகளையும் மணிவாசகரின் அன்புப் பணிநிலைகளையும் பழுதற நாம் உணர்ந்து கொள்வதற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/88&oldid=551086" இலிருந்து மீள்விக்கப்பட்டது