பக்கம்:இலக்கியச் சாறு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

87



இவ்வுரை விளக்கங்களில் நூல் முழுமை சான்ற குறிப்புச் செல்வங்கள் பரவிக்கிடக்கின்றன. ஒரு வாசகத்துக்கு

உரைகாணும்போது அடிகளாரின் பலவாசகங்கள் மேற்கோட்படுகின்றன. நின்வாசகத்தில் ஒரு மொழியே என்னையும் என்னுடையனையும் ஒன்றுவித்துத்

தருமொழியாம் என்றவள்ளலார்வாக்கில் இச்செறிவுகாண்க பெரும்புலவனின் ஒரு பாடலுக்கு நல்லுரைகாண்பதற்குக் கூட அவன்தன் முழுநூற் பயிற்சியும் நினைவுத் தொடர்ச்சியும் கைவரப்பெறுதல் வேண்டும். அறுபதாண்டு பழுத்த பயிலறிவு கதிர்மணி விளக்கத்தில் 170 பாடல்களில் தேக்கமாகி நின்கின்றன. இவற்றோடு பண்டிதமணியார் எழுதிய உரைநடைக் கட்டுரைகளிலும் திருவாசகப் படிவங்கள் பொன்படு வைரம் போல இலங்கக் காண்கின்றோம். உரையெழுதாத சில பகுதிகளின் விளக்கங்கள் இக்கட்டுரைகளிற் கிடைக்கின்றன. எனவே திருவாசக முழுமைக்கும் பண்டிதமணியின் உரைநிறை இல்லை என்பது நம் தவக்குறையாயினும், திருவாசகவுண்மைகளைக் கசடற அறிதற்கு உள்ள வுரைநிறையாகும் என்பதில் ஐயமில்லை. அதனாலன்றோ,

தெய்வ மறையாம் திருவா சகப்பொருளை

ஐயமறக் காட்டும் அணிவிளக்கம் - «, u என்று, திருச்சதகவுரையளவிற்கே இவ்வளவு பாராட்டினார் கவிமணி தேசிக விநாயகர். உலகியல் ‘. .

பண்டிதமணியார் திருவாசக உரையின் ஒருதனி வீறு உலகியல்பற்றிய விளக்கம் ஆகும் என்று காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம்.தலைமை பணிமை,உயர்வு பணிவு, அருமை எளிமை, செல்வம் நல்குரவு, பிறப்பு இறப்பு, ஏக்கம் அழுகை, பொறுமை சிறுமை, காம விழைவு, பிரித்துன்பம், எண்ணப்புரட்சி,செயல்மாற்றங்கள் எல்லாம்.மக்கள் வாழ்விற் காணப்படும் உலகியங்கள் அல்லவா? மக்களொடு தொடர்புடைய இறையுலக வளர்ச்சியிலும் இவையே. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/89&oldid=551087" இலிருந்து மீள்விக்கப்பட்டது