பக்கம்:இலக்கியச் சாறு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

89



வேண்டும். அப்போதுதான் அவன் நம்மிடம் நெருங்கி வருவான். இஃது உலகியல். கில்தவாமனமே என்ன வெல்லாம் கெடுதல் செய்துவிட்டாய் நெஞ்சமே என்று சுருக்கமாகச் சொல்லும் நடையில் இவ்வுலகியல் அமைந்துளது.

(ஆ) ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கினால் பயன்படுத்தலாம்.பிறருக்கு விற்றபின் அப்பொருளை ஆளுதல் முடியாது. இஃது உலகிடைக்கண்டது. ஆனால் இறைவனை அவ்விதி கட்டுப்படுத்துமா, கட்டுப்படுத்த முடியுமா? உலகியலுக்கு அவன் செயல்முரண். விற்றெலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விற்றபின்னும் அதனை ஆளும் உரிமைப்பாடு இறைவனுக்கு உண்டு. மேலும் ஈண்டு விற்றல், ஆளுதல் என்பதனை உலகவியல்பில் வைத்துப் பொருள் செய்யக்கூடாது.அவன் யாருக்கு விற்பான்? அவனிடம் உயிரை வாங்கவல்லார் யார்? ஆதலின் இவ்வினைச் சொற்கட்கு மெய்ப்பொருள் உண்டு என்று கருதிய பண்டிதமணியார் உயிரை வினைக்கீடாக மறுபிறப்புச் செய்வதே விற்றல் எனவும் வினை யொழிவில் திருவடிக்கண் சேர்த்துக் கொள்வதே ஆளுதல் எனவும் சைவ மெய்ம்மையைத் தெளிவிப்பர். இத் தெளிவானன்றோ இவ்வுரைக்குத் தனிப் பெருமையுண்டு.

(இ) ஒருசில பரம்பரையினர் தம்முன்னோர் சொத்தின் வருவாயை மட்டும் நுகரப் பாத்திமையுடையரேயன்றி அடகு வைத்தல்முதலியனசெய்யவியலாஇதுபதிவியல்இறைவனுக்கும் அன்ன கட்டுப்பாடு உண்டோ? விற்று ஆள்வதற்குரியவன் என்று சுருக்கமாகப் பாடாமல், விற்று எலாம் மிக ஆள்வதற்குரியவன்' என்றுவிரித்துப்பாடினமையால்,உயிரைஎவ்விதமும்செய்தற்குப் பாத்தியன் என்பது பெறப்படும். இவ்விளக்கத்திற்குத் திருவாசகத்திலே சான்றிடன் உண்டு. இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால் விருந்தினனேனை’ என்ற செய்யுள் உடைமையின், எல்லா நிலையையும் குறிக்கக் காண்கின்றோம்.

(ஈ) அறிவுப் பெருமையும் ஆண்மையும் வாய்ந்த ஒரு பேரரசன் யார்க்கும் கீழ்ப்படாமல், தலைநிமிர்ந்து இருப்பது விரும்பத் தகும். இது அரசுலகிற் காணப்படும் இறைமாட்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/91&oldid=551089" இலிருந்து மீள்விக்கப்பட்டது