பக்கம்:இலக்கியச் சாறு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

வ.சுப. மாணிக்கனார்



அருள் செய்யவேண்டும். இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி என்ற தொடர் சிவனார் ஆட்சியுலகியலைப் பின்பற்றவில்லை என்றபேருண்மையைப் புலப்படுத்துகின்றது. 'நம் இல்லங்களுக்கு எழுந்தருளிய அளவிலன்றி அப்பெருமான் தன் போன்ற திருவடிகளையும் தந்தருளினான்’ என்ற கருணை மிகுதியைப் பாராட்டுகின்றது இப்பாவைச் செய்யுள் என்பர் கதிர்மணி விளக்கத்தார். .

பண்டிதமணியின் உலகியல் விளக்கத்துக்கு மேலே காட்டப்பட்டவை'மிகச் சிலவே. சிறியவும் பெரியவுமான உலகநெறிகள் இவ்வுரையில் நிரம்பவுள. பண்டிதமணியின் சொற்பொழிவுகளும் மன்பதைப் பழக்க வழக்கங்களைத் தழுவியன என்பதனையும் அதனால் அரியனவும் எளியவாய்ப் புரிந்தன என்பதனையும் அப்பொழிவினைக் கேட்டார் உணர்வர். அருமையில் எளிய அழகே போற்றி என்ற வனப்புநிலை பண்டிதமணியின் திருவாசகவுரைக்கும்

பொருந்தும்.

சைவத்தின் ஒழுக்கங் காட்டிச் சமயங்கள் கடந்து நிற்கும் தெய்வத்தின் விருப்பங் காட்டித் தெளியாரும் ஒப்பவேண்டி வையத்தின் வழக்கங் காட்டி வகுத்தநல் லுரையைக் கண்டேம் கையொத்துத் தொழுது சொல்வேம் கதிர்மணி விளக்கம் வாழ்க என்பது ஆசானுரைக்கு இம்மாணவன் எழுதிய பழம் பாயிரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/94&oldid=551092" இலிருந்து மீள்விக்கப்பட்டது