பக்கம்:இலக்கியச் சாறு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருக்கோவைப் புரட்சி

திருமுறைக் கருத்தரங்கு என்பது சமயத்துறையின் காலத்திற்கு ஏற்ற புதிய அரங்காகும். திருமுறைகளை அன்போடுமட்டுமன்றி ஆராய்ச்சியோடுபடிப்பதற்கும்கலந்து உரையாடுதற்கும் இக்கருத்தரங்கு வழிகோலுகின்றது. நம் பெரியோர்கள் இயற்றிய தெய்வப் பாசுரங்களைப் பல்வகையில் ஆராய்வது அன்புக்கு முரணாகாது; ஊன்றுகோல் ஆகும். திருப்பாவை திருவெம்பாவைகளை மார்கழித் திங்களில் பரப்புவதுபோல, ஒவ்வொரு திருமுறையையும் பரப்புவதற்கு ஒவ்வொரு மாதத்தை வகுத்துக் கொள்ளலாம். கணக்காகப் பன்னிரு திங்கட்குப் பன்னிரு திருமுறைச் செல்வங்கள் நமக்கு

芝_G宵。 -

மணிவாசகரின் பாடல் எட்டாம் திருமுறையாக இருந்தாலும் காலையில் திருவாசகக் கருத்தரங்கு நிகழ்ந்தது. இப்போதுமாலையில்கோவைக்கருத்தரங்குநடைபெறுகின்றது. இவ்வாறு ஒரு திருமுறைக்குள் அடங்கிய ஒருவரின் இரு நூல்களுக்குத் தனித்தனி கருத்தரங்கு வகுத்திருப்பது திருவாசகம்போலத் திருக்கோவையும் சிறப்புடையது என்பதனைப் பகரும்.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் என்ற நல்வழியில் மணிவாசகரின் இரு நூல்களும் தனித்தனியாகச் சுட்டப்படுகின்றன. கோவையை முன்சுட்டித் திருவாசகம் பின் சுட்டப்படும் வரன்முறையும் நோக்கத்தகும்.

திருவாவடுதுறை திருமுறை முதற்கருத்தரங்கின் தலைமையுரை1971

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/95&oldid=551093" இலிருந்து மீள்விக்கப்பட்டது