பக்கம்:இலக்கியச் சாறு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

97



தில்லை', 'ஆலத்தினால் அமிர்தாக்கியகோன் தில்லை', 'பல்லிலனாகப் பகலை வென்றோன் தில்லை’, ‘மாயவன் வரங்கிடந்தான் தில்லை", என்று கூத்தப்பிரானின் திருவிளையாடல்களோடு இணைத்துப் பேசப்படும் தில்லை என்று அறியவேண்டும். பாட்டுடைத் தலைவன் செயல்கள் பெரும்பாலும் தில்லைக்கு அடையாக வருகின்றன. சங்கப் பாடல்களிற்போல் இயற்கையடை இல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைவாகும். எனவே கோவையின் கருப் பகுதி அல்லது செம்பாகம் இடைக்காலத்து வளர்ந்த சமயநிலைக்கு ஏற்பத் தெய்வப் பான்மையாகவும் உரிப் பகுதி முன்போல் மனிதப் பான்மையாகவும் அமைந்தன என்று அறியவேண்டும். இது காலமாற்றத்தால் விளைந்த இலக்கிய மாற்றம். சமயக்காதலர்கள்

இம்மாற்றம் இதனொடு அமையவில்லை. சமயப்புயல் மெய்யான அகப் பகுதியையும் தாக்கியது. தலைவன் தலைவி தோழி முதலான அகமாந்தர்கள் இன்ன திணையினர் இன்ன நாட்டினர் என்ற அளவிலே சுட்டப்படுதல் சங்க வழக்கு. திணைப்பாங்கே சங்கப்பாங்கு இடைக்காலத்து இப்பாங்கு சமயநிலைக்கு முன்னிற்க இயலவில்லை. கருப்பொருளில் வரும் மக்கட்கும் உரிப்பொருளில் வரும் மாந்தர்கட்கும் உறவே இராது சங்கப் பாடல்களில், முதற்கோவையான திருக்கோவையில் இவ்வகையிலும் ஒருமாற்றம்காண்கின்றோம். பாட்டுடைத் தலைவனை இறைவனாகக் கொண்டது மட்டுமன்றி அத்தலைவனுக்கும் கிளவித் தலைவனுக்கும் ஏனை அகமாந்தர்க்கும் நீங்கா உறவு வலியுறுத்தப்படுகின்றது.

ஈசர்க்கு யான்வைத்த அன்பி னகன்றவன் வாங்கியவென் பாசத்திற் காரென்ற வன்தில்லை யின்னொளி போன்றவன்தோள் பூசத் திருநீ றெளவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே. (109) சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ, - .

矣、

(20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/99&oldid=551097" இலிருந்து மீள்விக்கப்பட்டது