பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியமும் இலக்கியக் கல்வியும்: வேறுபாடுகள் இலக்கியம் ஒரு படைப்பு. இலக்கியக்கல்வி ஓர் அறிவியல் அறிவிற்குப் பொருத்தமற்றது அல்லது அறிவிற்குப் பொருத்த மற்ற சில கூறுகளையேனும் தன்னுள் கொண்டுள்ளது. இலக் கியக் கல்வி என்பது இசைத் துறை ஆய்வாளன், ஓவியக்கலை ஆய்வாளன் இவர்களது பணி போன்றது. அறிவியல் முறை இலக்கியக் கல்வி எனத் தனியாக ஒன்று இல்லை; இலக் கியத்தை ரசிக்க மட்டும் செய்யலாம்; இது தனிப்பட்டவர் களுக்கே உரியது என்பது டி.கே.சி. போன்றவர்கள் கருத்து. இலக்கியப் புலமை, இலக்கியத்தைப் பாராட்டும் நிலை ஆகிய இரட்டைநிலை இலக்கிய ஆய்விற்கு உதவாது. இலக்கியக் கலையை அறிந்து தெளியக்கூடிய நிலையில் எப்படிக் கற்பது? இதற்கு அறிவியல் முறைகளைப் போன்ற கற்கும் முறையை அமைத்துக்கொள்ளவேண்டும். அறிவியல் முறை என்பது சோதித்தறிவது, தற்சார்பற்ற நிலை, தெளிவு, பிறப்புறவு (origin), காரண காரியத் தொடர்பு, பொருளாதார சமூக நிலைகளைக் காரணமாகக் கொண்டது. புள்ளி விவரம், வரைபடம் முதலிய முயற்சிகளும் நடைபெறுகின்றன. இம் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இம்முறைகள் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அறிவுத்துறைகளுக்குப் பொது வான முறைகளான சான்றுப் பொதுமை (Induction), ஊகப் பொதுமை (Deduction), பகுத்தாய்வு (Analysis), தொகுத்தல் (Synthesis) ஆகியவை அறிவாய்தலுக்கு முன்னரே தத்துவத்தில் பயன்பட்டன். இதற்கு மேல் பல முறைகள், அறிவியல் வளர்ச்சிக்குப் பின் தோன்றியவை; தத்துவச் சிந்தனைகளில் இருந்து பெறப் பட்டவை; இவை தத்துவ முறையிலிருந்து தோன்றிய தாக் கம். இயற்கை அறிவியலுக்கும் மானிட ஞானத்துக்குமுள்ள வேறுபாடுகள், இவற்றின் முறைகளையும் குறிக்கோள்களை யும் அடிப்படையாகக் கொண்டவை.