பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வரலாற்று முறை WN, CONSTANLEY.SE- இத்தாலியின் பெனிட்டோ குரோச்சோ எழுதிய Philosophy of History Theory of Knowledge போன்ற நூல்கள் இங்குக் குறிப்பிடத் தகுந்தன. இதில் உள்ள சிக்கல்கள் என்ன? நாம் ஏன் ஷேக்ஸ்பியரைக் கற்கின்றோம்? அவரைக் கற்பது போல அவர் காலக் கவிஞர்களைக் கற்கவில்லை. எது ஷேக்ஸ்பி யருக்குத் தனிச் சிறப்பானது? எது ஷேக்ஸ்பியரை ஷேக்ஸ்பியராக்கு கிறது? அவருடைய தனித்துவம், பிறரைவிடக் காலத்தின் உணர்ச்சியை அழகாக நம் மனத்தில் வரைகிறார். இலக்கியத்தின் தனித்துவம், பொதுச் சட்டங்களை நிறுவும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஆங்கில மனம் அறிவு-உணர்வு என்றதுருவங்களிடையே ஊசலாடுகிறது. தற்காலத்தை நெருங்க இது அதிகமாகிறது. பௌதிகத்தில் பொதுச்சட்டம் எளிது. கலைப் படைப்பு, பொதுச் சட்டம் அமைக்கும் முயற்சியிலிருந்து நழுவி விடும். சிக்கலுக்கு ஒவ்வாத இரு விளக்கங்கள்: ஒரு கலைப்டைப்பின் தனிச் சிறப்பை வலியுறுத்துவது நன்மை பயக்கும் என்றாலும் எளிய பொதுச் சட்டங்களை நிறுவுவதற்கு மாறான நிலையில் அதனை வலியுறுத்துவது ஒரு கலைப்படைப்பு முழுநிலையில் ஒப்பற்றதாக அமையாது என்பதை மறந்துவிடுகிறது. இலக்கியப் பொது, சிறப்புத் தன்மைகளின் முரண்பாடு அரிஸ்டாடில் காலம் முதல் உள்ளதுதான். பொது சிறப்புப் போராட்டம் வரலாற்றுக் காலம் முதல் காணப்படுகிறது. சிறப்பான பண்புகள். பொதுவான பண்புகள் இரண்டும் உடையது. எலிசபெத் காலம். பொதுப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. இது ஷேக்ஸ்பியர் தனித்துவம். பல முறைகளின் இணைவே இலக்கியக் கொள்கை. தனித்துவம், பொதுமை இரண்டும் தேவை. மகிழ்வோடும் ஈடுபாடோடும் இலக்கியத்தைக் கற்கக் கூடாது என்பது இலக்கிய அறிவு தேவை என்று கூறுவதால் பெறப்படும் பொருள் அன்று. கொள்கை, இலக்கியப் புலமை பெற முன் தேவையாகும். இதுவேதான் இலக்கியக் கல்வி என்பதுமல்ல. நுட்ப ஆய்வறிவோடும் உணர்வோடும் இலக்கியத்தை ஓதினாலும் இக்கலை தனிப்பட்ட நிலையில் வளர்தற்குரியது. சிறப்புடையது. தனிப்பட்ட அனுபவ மரபு, இலக்கியப் புலமையோடு இணைக்கப்படவேண்டும்.