பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

நா.வானமாமலை


இப்பெண்ணை எப்படியாவது காப்பாற்றிவிடுவது என்று உறுதிகொள்கிறான். சாமியார் பெண்ணை அழைத்துக் கொண்டு ஒர் இருளடைந்த மூலைக்குச் செல்லுகிறார். கூணன் அவர்களிருவரையும் பின் தொடர்கிறான். இருட்டில் சாமியார் அவளை அனைத்து முத்தமிடப் போகிறார். உதடுகள் சந்திக்கவில்லை. வலியால் அலறிக்கொண்டு கீழே சாய்கிறார். கூணன் ரத்தம் தோய்ந்த கத்தியோடு நிற்கிறான். அவள் வெறுப்புப் பார்வையை வீசிவிட்டு வேகமாகப் போய்விடுகிறாள்.
இங்கு மாறானதோர் தீர்ப்பை வாசகன் வழங்கக் களம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கஹீனனான கூனனுக்குக் காதல் வரக்கூடாதா? அது உண்மையாகவும் இருக்கமுடியாதா? அப்படியானால் நிறைவேற முடியாத தன் காதல் வெறியால், அவளைக் கெடுக்க முயன்ற சாமியாரைக் கொல்ல நினைத்ததும் கொன்றதும் சரிதானா? சிறை, தண்டனை என்ற நிலைமைகளுக்கு உள்ளாக அவனுக்குத் துணிவு அளித்தது எது? இவையற்றியெல்லாம் வாசகன் ஒரு தீர்ப்பு அளிக்கவேண்டும். உண்மைக் காதலுக்கு ஆதரவாக, கொடுந்துன்பத்தை ஏற்கும் காதலுக்கு ஆதரவாக இருக்கும்படியாக நிகழ்ச்சிப் போக்குகளும் உணர்ச்சியோட்டங்களும் இந்நாவலில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பை வாசகன் ஏற்றுக்கொள்கிறான்.