பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்


உருவம்

கலைப்படைப்பாளி உலகை ஆழ்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். இது முதன்மைக் கருத்தாகிய உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு அவசியம். இவ்வுள்ளடக்கத்தைக் கலைப்படைப் பாக்குவதற்குக் கலை உருவம் தேவையாகிறது.

உலகை அறிவது எளிது, அதனைத் தூய்மையான உருவ மாக்குவது அரிது. எந்த மனிதனும் வாழ்க்கையை அறியலாம்; ஆனால் அதன் உருவம் பெரும்பான்மையோருக்கு வசப்படாதது

என்று ஜெர்மன் கவிஞர் கதே எழுதுகிறார். இது கலைத் தொழில் நுணுக்கம், கலைத்திறன் ஆகிய பண்புகளில் இருந்து வேறுபட்டது.
சிற்பங்களில் சிற்பக்கலை அறிவுக்கு ஏற்ற உருவங்களைப் படைத்துவிடலாம். இதற்குக் கலைத்தொழில் நுணுக்கமும் கலைத்திறனும் பயன்படும். ஆனாலும் அப்படைப்புகளில் கலையுருவம் வாய்க்காமல் போகக்கூடும். உள்ளடக்கம் பொருத்தமான கலையுருவமாக மாறுவது எளிதில் நிகழ்வதில்லை. மைக்கேல் ஏஞ்சலோ போன்ற கலைஞன்தான் "இந்தக் கல்லில் அவசியமற்றதை வெட்டியெறிவேன்" என்று உறுதியாகச் சொல்லமுடியும். கல்லைப் போலத்தான் வாழ்க்கை பற்றிய அறிவு. இவ்வறிவு தோற்றுவிக்கும் உணர்ச்சியும் கல்லைப் போன்றதே. முதலில் தோன்றுகிற அறிவும் உணர்ச்சியும் செதுக்கப்படாத கல்லை ஒத்திருக்கின்றன.
உருவத்தின் இரு தன்மைகள் வருணனையும் உணர்ச்சி வெளியீடும் ஆகும். இதன் கூறுகள் பல உருவ அமைப்பை உருவாக்க உதவும். அவற்றுள் சிலவற்றை இங்குக் குறிப்பிடுவோம்:
1.கலை இயைபு
2.கலைப்பின்னல் (plot)
3.கலையின் உள்ளடக்கம், உருவம் இவற்றின் ஒருமை
4.உள்ளடக்கத்தின் சாரம் (essence) உருவத்தில் பொதித்திருத்தல்