பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நா.வானமாமலை


வருகிறார்கள். இந்த நாவலில் எந்த ஒரு பாத்திரமும் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் சமூக மாற்றமே கதையின் பிரதானக் கருத்து. அதற்குள்ளடங்கியே பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஷோலாக்காவின் (Quiet Flows the Dan, Virgin soil upturned) 'டான் நதி அமைதியாகப் பாய்கிறது', 'கன்னிநிலம்’ என்ற நாவல்களிலும் எல்லாப் பாத்திரங்களும் சமமாக முக்கியமானவையே. இரண்டாம் உலகப்போரின் சூழலில் சமுதாயமாற்ற உணர்வு வளர்ச்சி பெறுவதும், அதன் விளைவாக நிகழும் சம்பவங்களும், நாவலின் பிரதான கருத்தாக அமைக்கப்பட்டுள்ளன. சமுதாய மாற்றத்திற்கு எதிரான சக்திகளும் ஆதரவான சக்திகளும் மோதிக்கொள்கின்றன. இப்போராட்டத்தின் முடிவு சோசலிசச் சமுதாயத்தின் பிறப்பு. இங்கும் சம்பவங்கள், கதை மாந்தர் செயல்பாடுகள், உணர்ச்சி மாற்றங்கள் அனைத்தும் சமூக மாற்றம் என்னும் பேராற்றின் வெள்ளத்தில் கலக்கும் சிற்றாறுகள் போலத் தோன்றுகின்றன. இப்புதிய போக்கு சோசலிச இலக்கியத்தில் பெரிதும் வளர்ச்சி
'முற்றுகை' (The Seige) என்ற நாவல் லெனின் கிரேட் நான்கு ஆண்டுகள் பாசிசப் படைகளின் முற்றுகைக்கு உள்ளாகியும் மக்கள் உணர்ச்சியும் குன்றாமல் பசியையும் பட்டினியையும் குண்டு வீச்சையும் ஏற்றுக்கொண்டு தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு அரண்களிலும் போர்முனைகளிலும் சோசலிச சோவியத் மக்களின் ஆதரவை எதிர்பார்த்து வீரமாகப் போராடிய கதையைச் சொல்லுகிறது. இக்கதையிலும் பிரதானக் கருத்துக்கள், மக்களின் வீரம், மக்களின் சோசலிச நேசம் ஆகியனவாகும். அந்த மகத்தான பிரதானக் கருத்துக்கு உள்ளடங்கியே பாத்திரங்களின் செயல்பாடுகளும் சம்பவ அமைப்புகளும் படைக்கப்பட்டுள்ளன.
சில கதைமாந்தருக்குப் பதில் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதிகள் அல்லது ஒரு நாட்டின் பிரதிநிதிகள் கதையில் செயல்பட்டு நிலைமைகளை மாற்றுவதாகக் காட்டப்படலாம். சமுதாய உணர்ச்சி கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீரர்கள் பழமையான நிகழ்ச்சிப் போக்கை மாற்ற முயலுவதாகக் கதை கூறுகிறது. சமுதாய மாற்றத்தில் பொது மக்களில் பெரும்பாலோர் பங்குபெறும் புறநிலைச் சூழலைக் கலைப் படைப்பாக்கும் நிலமையை இம்மாற்றம் குறிப்பிடுகிறது.
தனி மனிதக் கதைமாந்தர்களிலிருந்து, பல மனிதக் கதை மாந்தர்கள் (Mass heroism) கதைகளின் வீரர்களாகும் இவ் விலக்கியப் போக்கில் இசைவு என்னும் படைப்புக் கூறு முக்கி