பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

74


லில் தோன்றிய ஒலி இசைவுகளும் ராகமும் அப்பாடல்களில் உள்ளன. உடலசைவுகள் இல்லை. பேசத்தெரிந்த பின் குழந்தை எழுதப் பழகுகிறபோது, நாக்கைத் துறுத்துவது போலவும், நன்றாக எழுதப் பயின்றபின், நாக்கைத் துறுத்துவது நின்றுவிடுவது போலவும்தான் இருக்கிறது, இவ்விசை உருவத்தின் தோற்றமும் வளர்ச்சியும். ஒரு தொழிலின் இசைவுகளும் அவ்விசைவுகளால் தோன்றிய இசையும், அத்தொழிலின் தொடர்பு அறுந்த பின்னும் இசை வடிவாக மட்டும் நீடித்து நிலைக்கின்றன.
பெண்கள் பல்வேறு தொழில்களை வீட்டில் செய்கிறார்கள். இத்தொழில்களைச் செய்யும்போது ஏற்படும் உடலிசைவுகள், இசையிசைவுகளாக வெளிப்படுகின்றன. அம்மியில் அரைத்தல், மா அரைத்தல், நெல் குற்றுதல், அரிசி புடைத்தல், பலவகை விளையாட்டுக்கள் போன்ற தொழில்களில் ஏற்படும் உடல் இசைவு (body rhythm) இசை இசைவாக வெளிப்படுகிறது (musical rhythm). மா அரைக்கும்போது, இடுப்பிற்கு மேலுள்ள உடல் பகுதி இரு புறமாக அசைக்கப்படுகிறது. வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் அசைகிறது. தலை, மார்பு போன்ற பகுதிகள் இசைவாக அசைகின்றன.

எதிர்த்திசைகள் அடுத்தடுத்து அசைவுகள்

கை அசைகிறது. சில அசைவுகளுக்குப் பின் ஒரு கையால் மாவை வழித்துச் சேர்க்கிறார்கள். இது வேறுவிதமான அசைவு. மூன்று விதமான உடல் இசைவுகளுக்கேற்ப இசை இசைவு தோன்றுகிறது. இது போன்றே திரிகையில் தானியத்தைப் பொடியாக்கும்போது இசைவு தோன்றுகிறது. இவ்வாறு தோன்றும் நாட்டார் பாடல் மெட்டு, இத்தொழில் புரியாதபோதும், வேறு உள்ளடக்கங்கள் கொண்டு பலவகை நாட்டார் பாடல்களாக வெளிப்படலாம்.
தொழிலோடு சேர்ந்து தோன்றிய இசை-இசைவுகள் அவற்றிலிருந்து பிரிந்து, வளர்ச்சி பெற்று, நாட்டார் பாடலாகவும் மேலோர் பாடலாகவும் பரிணாமமடைகின்றன. இன்று, ஏற்றத்துக்குப் பதில் பம்ப் செட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏற்றத் தொழிலின் இசைவுகள் இதில் இல்லை. தொழில் மாற்றத்தால் இசைவு மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் உழைப்பினால் தோன்றிய இசைவு அழிந்துபோய்விடவில்லை. அதே