பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நா. வானமாமலை வெள்ளையரை எதிர்க்கப் பல பாளையக்காரர்களுக்கு ஒலை அனுப்புகிறான். அப்போது எழுபத்திரண்டு பாளையங்களின் பெயர்களும் அப்பாளையங்களை ஆளுபவர்களின் பெயர் களும் சில அடைமொழிகளோடு கூறப்படும். பள்ளுப் பாட் டில், பள்ளன் ஏருழவு செய்யப் புறப்படும்போது நெல்வகை சொல்லப்படும். ஒதெளி’ எனும் ஹோமருடைய காப்பியத் தில் டிராய் நகரைத் தாக்க வந்த கிரேக்கருடைய கப்பல் களின் பெயர்கள் வரிசையாகச் சொல்லப்படும். சிலப்பதி காரம், பத்துப்பாட்டு நூல்கள் இவற்றில் பூ வகை, ஒலி வகை, பட்டினத்தில் ஏற்றுமதியாகும் சரக்கு வகை அடுக்கிச் சொல்லப்படும். இவை யாவும் ஒன்று (1) என்ற உத்தியின் பாற்படும். மாறுபட்ட கருத்துக்களைச் சொற்களால் கூறி ஹிப் னாடிக் விளைவை ஏற்படுத்தலாம். பாக்குத் துவக்குதடி பழைய உறவு மிங்குதடி ஏலம் கசககுதடி என்னை விட்டுப் போறதுக்கோ? கம்மங் கருதிலேயோ கணுவுக்கொரு கோண லுண்டு என்சாமி தேகத்துல எள்ளளவு கோணவில்லை ஊர உறவெழந்தேன் ஒத்தமரம் தோப்பிழந்தேன் பேரான சிவகிரிய பிறப்பிலேயும் நான் மறந்தேன்

  • ... "... ? به بیم و it. * * - திருப்பித் திருப்பி வரும் விளிச் சொற்களை இடையிடையே

గా గా: - பெய்து ஹிப்னாடிக் விளைவை ஏற்படுத்தலாம். கண்ணான ராதா, மன்னவனே சாமி என்ற சொற்களைப் பாடலில் புகுத்தி இவ்விளைவைத் தோற்றுவிக்கலாம். அரைச்ச மஞ்சா ஏழுருண்டை கண்ணான ராதா மன்னவனே சாமி அரைக்காத மஞ்சா ஏழுமஞ்சா கண்ணான ராதா மன்னவனே சாமி 安 、 ميسم آران பாகற்காய் விற்கும் ஒரு பெண் அதன் சிறப்பைக் கூறுகிறாள். கசப்பான பாகற்காயை இனிப்பாக மாற்றுகிற மந்திர