பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 93 னேறியுள்ள மக்கள் தங்களிடையே நிலவி வந்த உறவுகளையும் தொடர்புகளையும் மிகவும் சிக்கலாக ஆக்கிக்கொண்டிருக் கிறார்கள். பண்டைய மனிதனிடம் மனித இனம் சேகரித்து வைத் திருந்த அறிவுத் தொகுப்பும் கருவித் தொகுப்பும், இயற் கையின் சக்திகளையும் அது மறைத்து வைத்திருந்த பொருள் களையும் அடக்கி ஆள்வதற்குப் போதுமானதாக இல்லை. தற்கால மனிதன் அறிவுத் தொகுப்பையும் கருவித் தொகுப்பை பும் பெரிதும் வளர்த்துக்கொண்டுள்ளான். அவ்வாறு வளர்த் துக்கொள்ளும்போது மனிதர்களின் சமூக உறவு சிக்கலடை கிறது. அவனுடைய வாழ்க்கை நிலைமைகள் மாறுதலடை கின்றன. அவனுடைய சிந்தனை உலகமும் உணர்ச்சி உலக மும் பெரிதும் விரிவடைகின்றன. புதிய உற்பத்திச் சக்திகளின் பெருவளர்ச்சி பழமையான சமுதாய அமைப்பு வேலிக்குள் வளரமுடியாமல் தேங்குகிறது. இத்தேக்கம் இச்சமுதாய வேலியை உடைத்து நொறுக்கி, புதிய சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற ஒரு சமுதாய அமைப்பை உருவாக்க மனிதனைத் தூண்டு கிறது. இது சமுதாயப் புரட்சி. புரட்சியை மனித குல்ம்தான் சாதிக்கவேண்டும். அறிவியல் சக்திகளும் தொழில் நுட்பச் சக்தியும் உற்பத்தித் திறனும் மனித உறவுகளை மாற்ற இய லாது. மாற்றவேண்டிய அவசியத்தை அவை தோற்றுவிக்கின் றன. ஆனால் இவை யாவும் சமூக உணர்வை மக்களிடம் தோற்றுவித்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். இந்நிலையில் கவிதையும் இலக்கியமும் எவ்வாறு பயன்பட வேண்டும்? மனிதன் தனது செயல்களால் புற உலகை உணர் வறியாமல் மாற்றும்பொழுது அவன் அக உலகை (உணர்ச்சி கள், விருப்பங்கள்) புற உலக மாறுதலுக்கேற்ப மாற்றிக் கொள்ளத் துணை செய்வது கவிதை. அவனது அகவய நோக்கை அது மாற்றுகிறது. கனவு காணும் கவிதையை இது புதிய தண்டவாளங்களில் செலுத்துகிறது. அக உலக உணர்ச்சி களை மாற்றுகிறது. கனவுலகைப் புற உலக உண்மைகளோடு தொடர்புபடுத்துகிறது. கவிதையைப் போலவே, அறிவியல் கற்பனை நாவல்கள் கனவுலகில் சஞ்சரிக்கின்றன. இங்கு இரண்டு அறிவியல் கற்பனை நாவல்கள் அக உலகை மாற்றி, பின்னர் நிஜ உலகம் மாற்றப்பட்ட இரு நிகழ்ச்சி களைக் குறிப்பிடுவோம். அலெக்ஸி டால்ஸ்டாய் எஞ்சினிர் காரினின் ஒளிக்கதிர்என்றொரு விஞ்ஞான விந்தை நாவலை எழுதினார். அது உலக முழுவதிலும் உள்ள இலக்கிய ரசிகர்களால் மிக நல்ல் இலக்கியப்படைப்பு என்று பாராட்டப்ப்ட்டது. கதைத்